காணாமற்போன பெண் சடலமாக மீட்பு.
காணாமற் போயிருந்த குடும்பப் பெண்ணொருவர் சடலமாகக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். நாயன்மார்கட்டு இராமநாதன் வீதியில் கடந்த 19ம் திகதி இரவு 9.30 மணிக்கு அயல்வீட்டில் படம்பார்த்துவிட்டு திரும்பும்போது காணாமற்போன யோகநாதன் பிரேமநந்தினி (32) என்பவரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இராமநாதன் வீதியிலுள்ள வீடொன்றின் வெளி;க்கிணற்றில் இவரது சடலம் கிடப்பதைப் படையினர் கண்டு அயலவர்களுக்கு அறிவித்தனர். சடலம் படையினரால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்டநடவடிக்கைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கிணறு உட்பட அப்பகுதி முழுவதும் காணாமற்போனவரை 20ம் திகதி காலை அயலவர்கள் தேடியிருந்த போதும் அப்போது சடலம் அங்குகாணப்பட்டிருக்கவி;ல்லை
எனவே குறித்தபெண் வேறொரு இடத்தில்வைத்துக் கொலைசெய்யப்பட்டு குறித்த கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் எனவும், அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சட்டவட்டாரங்களில் சந்தேகிக்கப்படுகிறது.
Average Rating