பார்வர்ட் பிளாக்கும் போலி லெட்டர் பேடும்-
பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவராக நடிகர் கார்த்திக்கே நீடிப்பதாக அக் கட்சி அறிவித்துள்ளது. நேற்று முன் தினம் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தேவராஜன் பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. அதில், கார்த்திக் தமிழக தலைவர் பதவியில் இருந்தும் மாநில பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.ஆனால், கட்சியின் தலைவர் பிஸ்வாசுக்கு கார்த்திக் மிக நெருக்கமாக இருந்து வரும் நிலையில் அவர் கட்சியை நீக்கப்பட்டதாக வந்த தகவல் நிருபர்களையே குழப்பியது.
இந் நிலையில் அகில இந்திய பொதுச் செயலாளர் தேவராஜன் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில்,
கார்த்திக்கை கட்சியை விட்டும் பதவியை விட்டும் நீக்கிவிட்டதாக தவறாக செய்தி வெளியாகியுள்ளது. அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்கிறார். கட்சியின் வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் தான், கட்சியின் லெட்டர் பேடை போலியாகத் தயாரித்து இது போன்ற அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் தான் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்படும். உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அல்லது தனித்துப் போட்டியா என்பது குறித்து சில நாட்களில் முடிவு செய்யப்படும் என்றார்.
கார்த்திக் கட்சியில் ‘போலி லெட்டர் பேடு’ அரசியல் நடப்பது இது முதன்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு அதிமுக தலைவி செல்வி.nஐயெலலிதா தம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென ஓர் அறிக்கை கார்த்திக்கின் பெயரில் வெளிவந்ததும் பின்னர் கார்த்திக்கே அதனை மறுத்ததும்
அதேபோல் சமீபத்தில் கார்த்திக்கின் வீட்டில் இருந்தே எல்லா பத்திரிக்கைகளுக்கும் ஒரு பேக்ஸ் வந்தது. அதில், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்று கூறப்பட்டிருந்தது. இதை மறுநாள் நிருபர்களை வீட்டுக்கு கூப்பிட்டு மறுத்தார் கார்த்திக்.