நேபாள நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் மந்திரி உள்பட 24 பேரும் பலி
Read Time:1 Minute, 15 Second
நேபாளத்தில் கடந்த 23-ந் தேதி, அந்நாட்டின் வனத்துறை மந்திரி கோபால் ராய், அவரது மனைவி மற்றும் மூத்த அதிகாரிகள் உள்பட 24 பேர் சென்ற ஹெலிகாப்டர் காட்டில் விழுந்து நொறுங்கியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. எனினும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது.
இந்நிலையில் காத்மாண்டுவில் இருந்து 400 கி.மீ. தூரத்தில் கஞ்சன்ஜங்கா வனப்பகுதியில் உள்ள கும்ஷா என்ற இடத்தில் ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் சிதறி கிடப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு உடல் கருகிய நிலையில் பிணங்கள் சிதறி கிடந்தன. உடனே அந்த உடல்கள் மீட்கப்பட்டன.
இதனிடையே ஹெலிகாப்டரில் சென்ற மந்திரி உள்ளிட்ட 24 பேரும் பலியானதாக உள்ளூர் வானொலி அறிவித்தது.