இலங்கையில் முதற்தடவையாக ஆண்கள் விபசார விடுதி கண்டுபிடிப்பு -8 பேர் கைது
ஆண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த நட்சத்திர விடுதியொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தலங்கம பொலிஸ் பிரிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஆண்கள் விபசார விடுதியொன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையென பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, குறிப்பிட்ட இந்த விடுதியிலிருந்து 8 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விடுதியின் உரிமையாளரான கோடீஸ்வர பெண் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகிறார்.
பொலிஸாரின் திடீர் முற்றுகைக்குள்ளான இந்த நட்சத்திர ஆண்கள் விபசார விடுதிக்கு இலங்கையிலுள்ள வசதி படைத்த பெண்களும் வெளிநாட்டுப் பெண்களும் வருவதாக கைது செய்யப்பட்ட சிலர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இங்கு வரும் பெண்கள் தனக்குத் தேவையான ஆணைத் தெரிவு செய்து கொள்ள வெளிநாட்டுப் பாணியிலான நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை பெற்றுக் கொடுக்கப்படுகிறது.
நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெறும் களியாட்டங்கள், விருந்துபசாரங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் பெண்களே இரவு 12 மணிக்குப் பின்னர் இங்கு வருகைதந்துவிட்டு அதிகாலையில் திரும்பிச் செல்வதாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்கள் விபசார விடுதிக்கு எதிராக தலங்கம பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தசநாயக்க தெரிவித்தார்.