இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரை…
இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அகமதுவையும் வெளியுறவுத்துறை செயலராக பதவியேற்றகவிருக்கும் சிவசங்கர்மேனனையும் இலங்கைத் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்றுமுன்தினம் (27.09.2006) காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா ஆகிய கட்சிகளின் தலைவர்களான வீ.ஆனந்தசங்கரி, த.சித்தாத்தன், ரி.சிறிதரன் ஆகியோர் புதுடில்லி சென்றுள்ளனர். அங்கு அவர்கள் வெளியுறவுத்துறை இணையமச்சரை சந்தித்து இலங்கையின் தற்போதய நிலைமை குறித்து விளக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இலங்கையின் பெரும் அரசியல் கட்சிகள் இரண்டும் சமஸ்டி முறையிலான தீர்வுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் இனப்பிரச்சினைக்கு நிச்சயமாக தீர்;வுகாணமுடியும் இவர்கள் தெரிவித்துள்ளதுடன் இதற்கு புலிகள் ஒருவேளை சம்மதம் தெரிவிக்காவிடினும் உறுதியான தீர்வை இந்தியா ஏற்படுத்த முடியும் என்று அமைச்சர் அகமதுவிடம் விளக்கிக் கூறியுள்ளனர்.