ஐ.நா. பொதுச் செயலர் பதவி : 2ஆம் இடத்தில் சஷி தரூர்!

Read Time:2 Minute, 54 Second

un-logo[1]1.jpgஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் இந்தியாவின் சஷி தரூர் இரண்டாம் இடத்தில் உள்ளார். தென்கொரிய வேட்பாளர் பான் கி-மூன் அதிக வேட்பாளர்களின் ஆதரவுடன் முன்னினையில் உள்ளார்! ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கான அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் 3வது முறையாக ஐ.நா. சபையில் நேற்று நடைபெற்றது.

இந்த தேர்தலில், ஐ.நா. பாதுகாப்பு அமைப்பின் 15 உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இதில் ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாட்டுத் தலைவர்கள் அளித்த வாக்குகள் மிகவும் ரகசியமாக வைக்கப்படும்.

இதில், தென்கொரிய அயலுறவு அமைச்சர் பான் கி-மூனுக்கு 13 பேர் ஆதரவாகவும், ஒருவர் எதிராகவும், மற்றொருவர் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்றும் வாக்களித்துள்ளனர். ஆனால் கடந்த முறை நடந்த தேர்தலில் 14 ஆதரவு வாக்குகளை இவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வேட்பாளர் தரூர் 8 ஆதரவு வாக்குகளையும், 3 எதிர்ப்பு வாக்குகளையும், 4 கருத்துச் சொல்லாத வாக்குகளையும் பெற்றுள்ளார். தற்போது இவர் ஐ.நா.வின் பொதுத் தகவல் துறையின் இணைச் செயலராக பணியாற்றி வருகிறார்.

அடுத்த அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் வரும் திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் 9 ஆதரவு வாக்குகளையும், நிரந்தர உறுப்பு நாடுகளால் ஒரு எதிர்ப்பு வாக்கும் அளிக்கப்படாதவராக இருக்க வேண்டும்.

ஐ.நா. பொதுச் செயலாளர் கோஃபி அன்னானின் பதவிக் காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அப்பதவிக்கு புதிய நபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இம்முறை ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு ஆசியாவைச் சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சமோவா குட்டித் தீவில் பயங்கர நில நடுக்கம்: 7 ரிக்டரில் பதிவானது- சுனாமி எச்சரிக்கை
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்