இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 332,424 ஆக உயர்வு !! (உலக செய்தி)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 332,424 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 5ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 30 ஆம் திகதியுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 332,424 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்ததாவது, கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 320,922 இலிருந்து 332,424 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 325 பலியாகியுள்ளனர். இதை அடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 9,195 இருந்து 9,520 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 162,379 இலிருந்து 169,798 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையில், மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.
அங்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 104,568 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கையில், மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 107,958 ஆக உள்ளது.
தமிழகத்தில் 44,661 தில்லியில் 41,182 குஜராத்தில் 23,544 உ.பி.யில் 13,615 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
Average Rating