கொழும்பு மாநகரசபையின் மூக்குக்கண்ணாடி குழு தலைவர் ராஜேந்திரன் பத்திரிகைகளுக்கு விடுத்திருக்கும் செய்தி

Read Time:2 Minute, 7 Second

Colombo.Slk.jpgColombo.Slk.2.jpg மூக்குக்கண்ணாடி சின்னத்தில் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள எமது சயேற்சைக்குழு அடுத்தமாத முற்பகுதியில் மாநகரசபை அங்கத்தவர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள் இராமநாதன் கணேசனை மேயராகவும் சேபால வசந்தவை பிரதிமேயராகவும் தேர்தல் ஆணையாளர்களக்கு சிபாரிசு செய்து கையளித்துள்ளோம் என கொழும்பு மாநகரசபை தேர்தலில் மூக்குக்கண்ணாடி சின்னத்தில் சுயேற்சையாகப் போட்டியிட்ட குழுத் தலைவர் எஸ்.ராஜேந்திரன் ஊடகமொன்றுக்குத் தெரிவித்தார்.

மாநகரசபை அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்களை இம்மாதம் 30ஆம்திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு தேர்தல் அணையாளர் கேட்டிருந்தார். அரசாங்க வர்த்தமானிகள் மூலம் பிரசுரிக்கப்பட்ட பின் அங்கத்தவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வார்கள்.

அன்றையதினமே அவர்கள் பதவிகளை இராஜினாமா செய்வார்கள், அதேநேரம் எமக்கு தேர்தலில் ஆதரவு வழங்கிய ஐக்கிய தேசியக்கட்சி அங்கத்தவர்களை சிபாரிசு செய்வேன்,

தேர்தலில் நான் தெரிவு செய்யப்படவில்லை ஆனால், எனக்காக பதவியை விட்டுக் கொடுக்க ஒருவர் தயாராக உள்ளார், ஆகையால் நானும் மாநகரசபை அங்கத்தவராக சத்தியப்பிரமாணம் செய்வேன்

எமது பட்டியலில் ஐ.தே.க. அங்கத்தவர்களை தெரிவு செய்வதன் மூலம் ஏற்படும் சட்டசிக்கலை எதிர் கொள்ளவும் நான் தயாராகவுள்ளேன் என்றும் ராஜேந்திரன் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மட்டக்களப்பில் இரண்டு புலி உறுப்பினர்கள் படையினரால் சுட்டுக்கொலை
Next post வவுனியாவில் இரு சகோதரர்கள் வெள்ளை வானில் வந்தோரால் துவக்கு முனையில் கடத்தப்பட்டனர்.