இராணுவத்தாலும் ஈ.பி.டி.பியாலும் அச்சுறுத்தலென கஜேந்திரன் பாராளுமன்றத்தில் முறைப்பாடு

Read Time:1 Minute, 39 Second

Kajendran.m.p.jpgsrilankaparalamanrakathiraikal.gif
இராணுவத்தினராலும் ஈ.பி.டி.பியினராலும் யாழ்ப்பாணத்திலுள்ள தமது காரியாலயமும், சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை காரியாலயமும் தீவைக்கப்பட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறப்பினர் எஸ்.கஜேந்திரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 12ம்திகதி தமது காரியாலயத்தினுள் இராணுவத்தினர் பிரவேசித்து தீவைத்ததாகவும் இதில் ஆறுலட்சம் ரூபாய் நஷ்டமானதாகவும், இதேபோல் சர்வதேச மாணவர் பேரவை காரியாலயம் தீவைக்கப்பட்டதில் ஆவணங்கள் நாசமாகியதுடன் எண்பத்தைந்து லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கஜேந்திரன் எம்.பி சபாநாயகரிடம் இன்று தெரிவித்துள்ளார்.

இதனால் தமது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும், தமது ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்றும், இராணுவத்தினராலும், ஈ.பி.டி.பி.இனராலும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் அவர் சபாநாயகரிடம் மேலும் கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்படுமாயின் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வவுனியாவில் இரு சகோதரர்கள் வெள்ளை வானில் வந்தோரால் துவக்கு முனையில் கடத்தப்பட்டனர்.
Next post காத்தான்குடியில் புலிகளின் கிளைமோர்த் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பொலிசார் பலி