பெண்கள் தங்கச் சுரங்கம்!! உடலுறவில் உச்சம்..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:23 Minute, 11 Second

உலகில் விலைமதிக்க முடியாத சொத்து என்றால் அது தங்கம், வைடூரியம், வைரம் போன்ற பொருள்கள் அல்ல; ரத்தமும் சதையுமான பெண்கள்தான்.

ஆம், பெண்களை அடைவதற்காகத்தான் இந்த உலகில் பல்வேறு போர்கள் நடந்துள்ளன. நமது நாட்டை எடுத்துக்கொண்டால், ராமாயணம்,

மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் உருவாகக் காரணமே பெண்கள்தான்.
ஹோமர் எழுதிய இலியட் போன்ற நாடகங்களும், ஷேக்ஸ்பியர் நாடகங்களும் பெண்களை அடைய எடுத்துக்கொண்ட முயற்சிகள்தான். அழகான பெண்களைத் தன்னருகே வைத்திருப்பதைப் பெருமையாகவும், கவுரவமாகவும் ஆண்கள் நினைக்கிறார்கள்.

அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். அவளது அழகை ஆராதனை செய்து அவளைச் சொந்தமாக்கிக்கொள்ளத் துடிக்கிறார்கள்.

பெண்களின் உடலில் தங்கச் சுரங்கம்போல் இன்பம் கொட்டிக்கிடக்கிறது என்பதை ஆண்கள் நம்புவதன் காரணமாகத்தான், உலகம் முழுவதும் பெண்களுக்காக ஆண்கள் ஏங்குகிறார்கள்.

எத்தனைப் பெண்களை அனுபவிக்க முடியுமோ, அத்தனை இன்பம் அனுபவிப்பதாக நினைக்கிறார்கள். பெண்களை மிக உயர்வாக ஆண்கள் மதித்தாலும், தங்களை மிக உயர்வாக பெண்கள் நினைத்துக்கொள்வதில்லை.
அதனால்தான், பெண்களின் மதிப்பு பெண்களுக்கே இன்னமும் தெரியதில்லை. தன்னுடைய உடல் ஆராதனைக்கு உரியதல்ல; அசிங்கம் என்று பெண் நினைக்கிறாள்.

இன்னும் சொல்வதென்றால், தன்னுடைய உடலைப் பற்றி அறிந்துகொள்வதே தேவையில்லாத செயல் என நினைக்கிறாள். அதனால்தான், இன்பம் கொ
டுக்கும் பாத்திரமாக இருக்கும் அவளால், இன்பம் அனுபவிக்கும் நிலையில் இருக்க முடிவதில்லை.
முதலில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ‘தான் முக்கியமானவள்’ என்றும், ‘தன்னுடைய உடல் ஒரு தங்கச்சுரங்கம்’ என்பதும் புரிய வேண்டும்.

அதனால், முதலில் பெண் உடல் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வோம். உடல் அமைப்பு உடல் அமைப்பில், ஆணும் பெண்ணும் பல வழிகளில் ஒன்றுபோலவே உள்ளனர்.
இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நுரையீரல் என்று பெரும்பாலான உறுப்புகள் ஒரே மாதிரியாகவே உள்ளன.
ஆனால், ஒரே ஒரு வித்தியாசம், இவர்களுடைய பாலியல் மற்றும் இனப்பெருக்கத்துக்கான உடல் உறுப்புகள் மட்டும்தான்.
ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தையை உருவாக்க இனப்பெருக்க உறுப்புகள்தான் உதவி செய்கின்றன. பெண் உடலில், இனப்பெருக்க உறுப்புகள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் அமைந்துள்ளன. வெளியே

மார்பகங்கள்
மார்பகங்கள் எல்லா வடிவிலும் எல்லா அளவிலும் இருக்கும்.
ஒரு பெண்ணுக்கு 10 முதல் 15 வயது ஆகும்போது, அதாவது பூப்படையும் பருவத்தில் மார்பகம் வளரத் தொடங்கும்.

கருத்தரித்த பிறகு, குழந்தைக்கான பால் இங்குதான் சுரக்கிறது.
உடலுறவின்போது மார்பகத்தைத் தொட்டால் உணர்ச்சி அதிகரிக்கும்.

மார்பகத்தின் உள்பக்கம் இருக்கும் சுரப்பிகள், குழந்தைக்கான பாலைச் சுரக்கின்றன. அந்தப் பாலை, மார்பகக் காம்புக்குக் கொண்டு செல்பவை, சுரப்பிக் குழாய்கள். மார்பகக் காம்பின் வழியே பால் வெளிவரும்.
சிலசமயங்களில், இது விறைத்து வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். சிலசமயங்களில், இது தட்டையாக, மடிந்துபோய் இருக்கும். மார்பகக் காம்பைச் சுற்றி இருக்கும் கறுத்த மேடான பகுதி, மார்பு கறுவட்டம் (Areola) எனப்படுகிறது.
கறுவட்டத்தில் உள்ள மேடுகள் எண்ணெய்ப் பசையை உற்பத்தி செய்கின்றன. அவை மார்பகக் காம்பை சுத்தமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

பருவ மாற்றங்களும் ஹார்மோன்களும்

உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள்தான், உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்துகின்றன.

ஒரு பெண்ணுக்கு, முதல் மாதவிலக்குக்குச் சற்றுமுன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற இரு ஹார்மோன்கள் சுரக்கின்றன.

இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள் ஆகும்.

இந்த இரு ஹார்மோன்களால்தான் பெண் பருவம் அடைகிறாள். பருவம் அடைந்த பிறகு, மாதவிலக்கு நிற்கும்வரை, பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புக்கு ஹார்மோன்கள் தயார்படுத்துகின்றன.

இந்த ஹார்மோன்களின் உத்தரவுப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன.

ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. கருத்தரித்த பிறகும், தாய்ப்பால் கொடுக்கும்போதும் ஹார்மோன்கள் பல மாற்றங்களை உண்டாக்குகின்றன.

இந்த ஹார்மோன்களால்தான் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது மாதவிலக்கு ஏற்படுவதில்லை. குழந்தை பிறந்த உடனே பாலைச் சுரக்கவைப்பதும் இந்த ஹார்மோன்கள்தான்.

ஒரு பெண், இனப்பெருக்கத்துக்கான கட்டத்தைக் கடக்கும்போது, இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாகக் குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. பெண்ணின் உடலில் கருத்தரிப்பதற்கான வாய்ப்பும் முடிந்துபோகும்.

மாதவிலக்கு முற்றிலுமாக நின்றுபோகும். இதற்குப் பெயர்தான் அல்லது மாதவிலக்கு நின்றுபோதல் அல்லது மெனோபாஸ் (Menopause).

இவற்றைத் தொடர்ந்து பெண்ணின் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப, அவளின் மனநிலை, காம உணர்வு, எடை, உடல் சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும்.

இவற்றையெல்லாம் பெண்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதும் ஏதாவது பிரச்னை என்றால், அதில் இருந்து மீண்டு வர முடியும்.

மாதவிலக்கு

பெண்கள் தங்கள் உடலை மிகவும் அசிங்கமாக நினைப்பதற்கு மிக முக்கியமான ஒரு காரணம், ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிலக்கு.

இனப்பெருக்கத்துக்கான காலகட்டத்தில் ஒரு பெண் இருக்கும்போது, ஒவ்வொரு மாதமும் அவளுடைய கர்ப்பப்பையில் இருந்து பிறப்புறுப்பு வழியாக உடலை விட்டு ரத்தம் வெளியேறும்.

மூன்று முதல் ஐந்து நாள்களுக்கு இப்படி ஏற்படுவதற்கு மாதவிலக்கு என்று பெயர். உடல் நல்ல நிலையில் இருப்பதற்கு அடையாளம்தான் மாதவிலக்கு.

இதன் அடிப்படையில்தான், கருத்தரிப்பதற்கு உடல் தயாராகிறது.

மாதவிலக்குச் சுற்று ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசப்படலாம். ரத்தப்போக்கு வரும் முதல் நாள் இது தொடங்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு 28 நாள்களுக்கு ஒருமுறை இந்த ரத்தப்போக்கு (மாதவிலக்கு) ஏற்படும்.

இதுவே சரியான மாதவிலக்குச் சுற்று என்று கணக்கிடப்படுகிறது. ஆனால், சில பெண்களுக்கு 20 நாள்களுக்கு ஒருமுறைகூட மாதவிலக்கு ஏற்படும்.

சில பெண்களுக்கோ, 45 நாள்களுக்கு ஒருமுறைதான் இது நிகழும்.

மாதவிலக்குச் சுற்றின்போது, சினைப்பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் ஹார்மோன்களின் அளவு மாறிக்கொண்டே இருக்கும்.

மாதச் சுற்றின் முதல் பாதியில் பெரும்பாலும் சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன்தான் சுரக்கும். இதனால், கருப்பையின் உள்பக்கச் சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களால் ஆன மிருதுவான படலம் உருவாகிறது.

ஒருவேளை, பெண் கருத்தரித்து குழந்தை உருவானால், அது சுகமாக இருப்பதற்கான ஏற்பாடுதான் இந்த மிருதுவான படலம். மிருதுவான படலம் தயார் ஆனதும், ஏதாவது ஒரு சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறும்.

இந்த முட்டை ஃபெலோப்பியன் குழாய் வழியாகக் கருப்பையை அடையும்.

அப்போது, பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப்பாள். அந்தச் சமயத்தில் ஆணும் பெண்ணும் உடலுறவுகொண்டால், முட்டையோடு ஆணின் உயிரணு (விந்து) சேர வாய்ப்பு உண்டு.

இதுதான் கருத்தரித்தல். கர்ப்பக் காலத்தின் தொடக்கமும் அதுதான். மாதச் சுற்றின் இரண்டாம் பாகத்தில், அதாவது அவளது அடுத்த மாதவிலக்கு தொடங்கும்வரை, அவள் உடலில் புரோஜெஸ்டீரோன் ஹார்மோன் சுரக்கிறது.

இந்த ஹார்மோனும் கருத்தரிதலுக்கு ஏதுவாக கருப்பையின் மிருதுவான உள்சுவரை உருவாக்குகிறது. பெரும்பாலான மாதங்களில் பெண்ணின் முட்டை கருத்தரிக்காது என்பதால் கருப்பையின் சுவர்ப் படலத்துக்குத் தேவை இருக்காது.

சினைப்பைகளும், ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடும். இதன்விளைவாக, சுவர்ப் படலமானது உடைந்து சிதைந்து, மாதவிலக்கின்போது கருப்பையில் இருந்து வெளியேறும்.

இதோடு, முட்டையும் வெளியேறும். இது, புதிய மாதாந்திரச் சுற்றின் தொடக்கமாகும். மாதவிலக்கு நின்றவுடன், சினைப்பைகள் சுவர்ப் படலத்தை உருவாக்கும்.

பெண்களுக்கு வயதாகி, மாதவிலக்கு முற்றிலுமாக நிற்பதற்கு முன் ரத்தப்போக்கு அடிக்கடி ஏற்படலாம். ரத்தப்போக்கின் அளவும், இளமையாக இருந்தபோது ஏற்பட்டதைவிட அதிகமாக இருக்கலாம்.

மாதவிலக்கு நிற்கப்போகும் காலத்தில் (மெனோபாஸை நெருங்கும் சமயத்தில்), மாதவிலக்கு சில மாதங்கள் நின்று மீண்டும் தொடங்கலாம்.

இதை, அசுத்த ரத்தமாக நினைத்து பெண்களே தங்களைத் தாழ்த்திக்கொள்வார்கள். இது, உடலின் இயல்பான ஒரு செயல்என்று ஏற்றுக்கொள்வதே பெண்களுக்கு உரிய கடமையாகும்.

பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகள்

பிறப்பு உறுப்பு

இரு தொடைகளுக்கு இடையே காணப்படும் இனப்பெருக்க உறுப்பு இது.

இதன் வெளிமடிப்புகள் தடித்த சதைப்பகுதிகளுடன் இருக்கும். கால்கள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும்போது இவை மூடிக்கொண்டு உள் பாகங்களைப் பாதுகாக்கிறது.

உள்மடிப்புகள் மிருதுவான தோல்பகுதியைக் கொண்டவை. இங்கு முடி இருக்காது. தொட்ட உடனே உணர்ச்சி ஏற்படும். உடலுறவின்போது இது விரிவடையும்.

ஹைமன் (Hymen)

பெண் உறுப்பின் திறப்பின் உள்ளே அமைந்துள்ள மெல்லிய சதைப்பகுதி இது.

கடின வேலை, விளையாட்டு போன்ற நடவடிக்கைகளின்போது இது விரிவடையும் அல்லது கிழிந்துபோகும்.

அப்போது லேசாக ரத்தம் வரும். முதன்முறை உடலுறவின்போதும் இது கிழிபடலாம்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹைமன் வித்தியாசப்படும்.

சில பெண்களுக்கு ஹைமன் இருக்காது. சிலருக்கு, எளிதாகக் கிழிக்க முடியாமல், மருத்துவரிடம் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை வரும்.

பொதுவாக, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு ஹைமன் தானாகவே கிழிந்துபோவது உண்டு.

கிளைட்டோரிஸ்

மலர்மொட்டு போன்ற சிறு பாகம்.

பெண் உறுப்புகளில் மிகுந்த உணர்ச்சியைத் தரக்கூடியது. இதையும் இதைச் சுற்றியுள்ள பகுதியையும் தேய்த்தால் பெண்ணுக்குப் பாலியல் வேட்கை அதிகமாகி, உச்சகட்டத்தை விரைவில் அடைவாள்.

இதை பெண்ணின் வளராத ஆண் உறுப்பு என்று சொல்வார்கள்.

பெண்ணின் முக்கிய உள்பாகங்கள் சினைப்பை சினைப்பையில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை ஃபெலோப்பியன் குழாய்க்கு அனுப்பப்படுகிறது.

இதோடு, ஆணின் விந்தணு இணையும்போது அது குழந்தையாக மாறுகிறது. ஒரு பெண்ணுக்கு, கருப்பையின் இருபுறமும் தலா ஒன்று என்ற எண்ணிக்கையில் சினைப்பைகள் இருக்கும்.

ஒவ்வொரு சினைப்பையும் ஒரு திராட்சைப் பழ அளவில் இருக்கும்.

கர்ப்பப்பை வாய்

கருப்பையின் வாயைத் தன் கர்ப்பப்பை வாய் என சொல்வார்கள்.

கருப்பையின் இந்தத் திறப்பு, பிறப்பு உறுப்புக்குள் செல்கிறது. ஆணின் உயிரணு, கர்ப்பப்பைக்குள் கர்ப்பப்பை வாயில் உள்ள சிறிய துவாரம் வழியே உள்ள நுழைகிறது.

அதேநேரத்தில், ஆண்குறி போன்ற மற்றவை கருப்பையில் நுழைய முடியாதபடி இது தடுக்கிறது.

குழந்தைப் பிறப்பின்போது, இது திறந்து குழந்தை வெளியே வர உதவுகிறது.

ஃபெலோப்பியன் குழாய்கள், சினைப்பையையும் கர்ப்பப்பையையும் இணைக்கின்றன. சினைப்பை, ஒரு முட்டையை வெளியிடும்போது, அந்த முட்டை இந்தக் குழாயில் பயணம் செய்து கருப்பையை அடைகிறது.

பாலியல் பிரச்னைகள்

வளரும் பருவத்தில், பெரும்பாலான பெண்களுக்குக் காதல் மற்றும் காம உணர்வுகள் வரத்தான் செய்யும். தாங்கள் யாரையாவது தொட வேண்டும் அல்லது யாராவது தங்களைத் தொடவேண்டும் என்று அவர்கள் இச்சையுடன் நினைப்பது சாதாரண விஷயம்தான்.

இதற்கு ஹார்மோன் சுரப்புதான் காரணம்.

பெண்கள், உடலுறவில் ஈடுபடவும் பல காரணங்கள் உண்டு.

சிலர் குழந்தைவேண்டி உடலுறவில் ஈடுபடுகிறார்கள். சிலருக்கு உடலுறவு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.

அந்த மகிழ்ச்சிக்காக சிலர் உடலுறவில் ஈடுபடுவார்கள். சிலர், அதில் விருப்பம் உண்டோ இல்லையோ, மனைவி என்ற அடிப்படையில், கடமைபோல் அதில் ஈடுபடுகிறார்கள்.

சிலர், பணத்துக்காக அல்லது உணவு அல்லது தனது குழந்தைகளுக்கு உடைகள் வாங்குவதற்காக அல்லது தங்க இடம்வேண்டி கட்டாயத்தின்பேரில் அதில் ஈடுபடுகிறார்கள்.

சிலர், தன்னுடைய கணவன் அல்லது காதலன் தன்னை அதிகம் நேசிக்க வேண்டும் என்பதற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.

கட்டாய உடலுறவு

பெண்கள் போகப் பொருளாகவே கருதப்படுவதால், எவ்வளவு தூரம் அவர்களைத் தலைக்கு மேல் தூக்கிவைக்கிறார்களோ அவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தவும் செய்கிறார்கள்.

உலகம் முழுவதும் பல பெண்களும் இளம் பெண்களும் விருப்பம் இல்லாமல் உடலுறவில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பெரும்பாலும், காதலர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்களின் ஆண் நண்பர்களே இவ்வாறு நிர்ப்பந்திக்கிறார்கள்.

சில இடங்களில், இதை காதலனின் பலாத்காரம் (Date rape) என்று அழைக்கின்றனர்.

இந்த நிர்ப்பந்தம், உடல் ரீதியானது மட்டுமல்ல; உணர்வுகளாலும், வார்த்தைகளாலும்கூட அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். விருப்பம் இல்லாமல் யாரையும், யாரும் பாலுறவுக்கு நிர்ப்பந்திக்கக் கூடாது.

மனைவி என்றாலும் அவளது அனுமதி இல்லாமல் உறவுகொள்ளக் கூடாது.

தற்போதுதான், பெண்களுக்கும் இன்பம் தரவேண்டும் என்ற எண்ணம் ஆண்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

அதுபோல், உச்சகட்ட இன்பம் பெறுவது தங்களுக்கும் சாத்தியம் என்பதைப் பெண்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.

கணவனிடம் இருந்து எப்படி உச்சகட்ட இன்பத்தைப் பெறுவது என்பதிலும் பெண்கள் தேர்ச்சிபெற வேண்டியது அவசியமாகும்.

உச்சகட்டத்தில் என்ன நிகழும்?

செக்ஸ் ஆசையால் பெண்கள் தூண்டப்படும்போது, அவளது இதயத்துடிப்பு அதிகரிக்கிறது.

உடல் முழுவதும் இருக்கும் உறுப்புகள் இறுக்கமடைகின்றன.

மார்பகங்கள் விரிவடைகின்றன. மார்புக் காம்புகள் விறைப்படைகின்றன. பெண்களின் கழுத்து, முகம் போன்ற பகுதிகள் சிவப்பாக மாறுகிறது.

கிளைட்டோரிஸ் பகுதி சிறிதளவில் வீக்கம் அடைகிறது. பெண் உறுப்பில் திரவக் கசிவு உண்டாகி, உள்ளே ஆணுறுப்பை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு விரிவடைகிறது.

பெண்ணுக்கு ஆசை அதிகரிக்க அதிகரிக்க அவளது உடல் முழுவதும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன.

கிளைட்டோரிஸ் பகுதி துடிக்கிறது. அனைத்துத் தசைகளும் இறுக்கமடைந்து, உடல் நடுக்கம் அடைகிறது.

இந்த நிலை, நான்கு நொடியில் இருந்து பதினைந்து நொடி வரை நீடிக்கிறது.

இதுபோன்ற உச்சகட்ட நிலையானது மென்மேலும் நீடிக்கக்கூடியது. இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவை அதிகரிக்கிறது.

சில பெண்கள், கட்டுப்படுத்த முடியாமல் சந்தோஷக் கூச்சல் போடுவார்கள். பெண்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட உறவுக்கான உறுப்புகள் மட்டுமின்றி, உடல் முழுவதுமே சந்தோஷத்தில் நடுக்கம் அடைகிறது.

இந்த உச்சகட்டத்தில், சில பெண்கள் விந்து வெளிப்படுத்துகிறார்கள். பெண்கள் முகத்தில் மாபெரும் இன்பத்தை அனுபவித்த களைப்பையும், வலியுடன் இருப்பதுபோன்ற உணர்வையும் காண முடியும்.

இந்த உச்சகட்டத்தைத் தொடர்ச்சியாக மூன்று முறைக்கு மேலாகப் பெண்களால் அனுபவிக்க முடியும். தொடர்ந்து பிறப்புறுப்பு, கிளைட்டோரிஸ் தூண்டப்படும்போது உச்சகட்டத்தை அனுபவிக்கிறார்கள்.

பொதுவாக, உடலுறவின்போது பெண்களது கிளைட்டோரிஸையும் ஆண்கள் சேர்த்துப் பயன்படுத்தும்பட்சத்தில் மிக எளிதில் அவர்கள் உச்சகட்டத்தை அடைந்துவிடுவார்கள்.

பின்பக்கம் இருந்து ஆண் உறுப்பை பெண் உறுப்புக்குள் நுழைத்து, கை விரல்களால் கிளைட்டோரிஸை தூண்டிக்கொண்டிருந்தால், பெண்களால் மிக எளிதில் உச்சகட்டம் அடைய முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உங்களுக்கு உடலுறவு தொடர்பான சந்தேகங்கள் இருக்கா..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பசியின்மையும் ஆயுர்வேத தீர்வும்! (மருத்துவம்)