உங்களுக்கு உடலுறவு தொடர்பான சந்தேகங்கள் இருக்கா..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:4 Minute, 49 Second

சென்றமுறை மருத்துவரிடம் சென்ற போது உடலுறவு பற்றி உங்களது சந்தேகங்களை கேட்டீர்களா என்ற கேள்விக்கு பெரும்பாலும் அனைவரிடம் இருந்தும் இல்லை என்று தான் பதில் வரும். ஏனென்றால் இந்த உடலுறவு சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்பதற்கு அனைவருக்கும் பயம் மற்றும் தயக்கம். ஆனால் உடலுறவு என்ற வார்த்தையில் உள்ள காமத்தை எடுத்துவிட்டால், இது உடலின் ஒரு செயல்பாடாக மட்டுமே கருதப்படும்.

உடலுறவை பொருத்தவரை உங்களுக்கு எந்த இடைவெளியில் உடலுறவு கொள்வது, கர்ப்ப கால உடலுறவு, பிரசவத்திற்கு பின்னரான உடலுறவு போன்ற பல சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் மருத்துவரிடம் இதை பற்றி கேட்பதில் எந்த தவறும் இல்லை. இதில் கூச்சப்படுவதற்கும் ஒன்றும் இல்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆரோக்கிய பிரச்சனை பலரும் தனக்கு உடலுறவு தொடர்பான பிரச்சனை ஏற்பட்டு பாலியல் செயலிழப்பிற்கு ஆளான பிறகு தான் மருத்துவரை நாடுகின்றனர். ஆனால் உடலுறவு பிரச்சனைகளை உடற்பயிற்சிகள் மற்றும் சத்தனா உணவுகளை உண்பதன் மூலம் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம். உடலுறவு பிரச்சனையை வெறும் காமம் தொடர்பானதாக மட்டுமே நினைப்பது தவறு. இது சிறுநீரகம், உளவியல், கர்ப்பமடைதல் ஆகியவை சார்ந்ததாகவும் இருக்கிறது. உடலுறவு என்பது உடல் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாகும். இது அனைத்து உயிர்களுக்கும் போதுவானது. எனவே இதனை பற்றிய சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்பதில் தயக்கம் வேண்டாம்.

மருத்துவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? மருத்துவரிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம். அவர் உடலுறவு பற்றி பேசிகிறார் என்பதற்காக அவரிடம் மரியாதை குறைவாகவோ அல்லது முட்டாள் தனமான கேள்விகளையோ கேட்க கூடாது. ஒரு உடலுறவு பிரச்சனை தொடர்பான சந்தேகத்தை நீங்கள் கேட்காமல் இருப்பதால், உங்களது ஆபத்து அதிகரிக்க தான் செய்யும்.

#1 மருத்துவரிடன் கேட்க வேண்டிய கேள்விகளை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அவற்றை பயம் இல்லாமல் மருத்துவரின் கேளுங்கள். அவர் அதற்கு உகந்த பதிலளிக்க மருத்துவரிடன் நல்லமுறையிலான நட்பு வைத்திருப்பது அவசியம்.

#2 கேள்விகளை உங்களுக்கு தெரிந்த வார்த்தைகளை உபயோகித்து கேட்கலாம். மருத்துவம் சம்பந்தப்பட்ட வார்த்தைகளை உபயோகித்து தான் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

#3 முதல்முறையாக மருத்துவரை சந்தித்து பாலியல் தொடர்பான கேள்விகளை கேட்க தயக்கம் இருந்தாலும், நீங்கள் இரண்டாம் முறை சந்திக்கும் போதாவது உங்களது கேள்விகளை கேட்கலாம்.

#4 உங்களது சந்தேகங்களை தீர்த்து வைத்தற்காக மருத்துவருக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

#5 நீங்கள் மருத்துவரிடம் உங்களது பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை மறைக்காமல் சொல்ல வேண்டியது அவசியம்.

#6 நீங்கள் தவறான உறவுகள் மற்றும் தீய பழக்கங்கள் ஆகியவற்றில் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் இதை பற்றி சொல்ல வேண்டியது அவசியம்.

#7 நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மருத்துவருக்கு விடை தெரியவில்லை என்றால், உங்களுக்கு விடையளிக்க கூடிய ஒரு மருத்துவரை சந்திக்க பரிந்துரை செய்ய சொல்லுங்கள்.

#8 மருத்துவர் மீது நம்பிக்கை வையுங்கள். அவர் கூறும் விஷங்களை கடைபிடிப்பதில் அலச்சியம் வேண்டாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post காமன்வெல்த் விளையாட்டில் கலக்கிய காரிகைகள்! (மகளிர் பக்கம்)
Next post பெண்கள் தங்கச் சுரங்கம்!! உடலுறவில் உச்சம்..!! (அவ்வப்போது கிளாமர்)