நலம் தரும் நட்ஸ்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 37 Second

*இதில் ஒமேகா 3  நிறைந்துள்ளதால், ஆன்டி-இன்ஃப்ளமேட்டரியாக செயல்படும். ஆஸ்துமா, ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், எக்ஸிமா, சொரியாசிஸ் பிரச்னைகளைக் கட்டுப்படுத்த உதவும்.

*டைப் 2 டயாபடீஸ் உள்ளவர்களுக்கு ஏற்றது. தினமும் கால் கப் என தொடர்ந்து மூன்று மாதங்கள் உண்டுவர, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

*ஒமேகா 3 உள்ளதால் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

*இதில், மெலடோனின் இருப்பதால் ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.

*சீரான இதயத்துடிப்புக்கு உதவும்.

*எல் ஆர்ஜினின் என்ற கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளதால், ரத்தக் குழாய்களின் விரிவடையும் தன்மையை மேம்படுத்துகிறது. ரத்தக் குழாய்கள் ஆரோக்கியமாவதால், முதுமை அடைவது தாமதமாகிறது.

*ஏ.எல்.ஏ (Alpha-linolenic acid) நிறைந்துள்ளதால், திடீர் இதயத் துடிப்பு முடக்கம் எனப்படும் சடர்ன் கார்டியக் அரெஸ்ட் ஏற்படாமல் காக்கும்.

*வைட்டமின் பி, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், மாங்கனீசு நிறைந்துள்ளன.

*நல்ல லேக்சேட்டிவ்ஸ் ஆக செயல்பட்டு, மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.

*பாலிபீனல் நிறைவாக உள்ளதால், கல்லீரல் பிரச்னையைத் தவிர்க்கும்.

*மார்பகம் மற்றும் பிராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும்.

*சீரான எடை பராமரிப்புக்கு உதவும்.

*தினமும் 75 கிராம் சாப்பிட்டுவர, விந்து கெட்டிப்படும். உயிரணுக்களின் எண்ணிக்கை மேம்படும்.

பேரீச்சம் பழம்

*தினமும் 10 பேரீச்சம்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் குடித்துவந்தால் மலச்சிக்கல் பிரச்னை தீரும்.

*உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழித்து, நல்ல பாக்டீரியாவை மேம்படுத்தும்.

*எடை அதிகரிக்க விரும்புவோருக்கு ஏற்றது. ஒரு பேரீச்சம் பழத்தில் 20 கலோரி உள்ளது.

*ஒரு கை நிறைய பேரீச்சம் பழத்தை முதல் நாள் தேனில் ஊறவைத்து மறுநாள் சாப்பிட, காம சக்தியை (செக்ஸுவல் ஸ்டாமினா)  நீட்டிக்க உதவும்.

*பொட்டாசியம் நிறைந்திருப்பதால், வயிற்றுக்கடுப்புக்கு நல்லது.

*ஆல்கஹால் போன்ற போதை பழக்கத்திலிருந்து மீள்பவர்களுக்கு நல்ல டீடாக்ஸிபிகேஷன் ஏஜென்டாகச் செயல்படும்.

*புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி1,பி2,பி3,பி5 மற்றும் சி நிறைந்தது.

*நரம்புமண்டலம் மேம்பட உதவும். எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தும்.

*புளோரல் (Floral) எனப்படும் வேதிப்பொருள் உள்ளதால், பல் தொடர்பான பிரச்னைகளை சரி செய்ய உதவும்.

முந்திரி

*முந்திரியில் புரோட்டீன் நிறைந்துள்ளது. மூஃபா கொலாஸ்ட்ரால் எனப்படும் கெட்ட கொழுப்புக் குறைவு என்பதால், இதயத்துக்கு நல்லது.

*ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்  நிறைந்துள்ளதால் ஃப்ரீ ரேடிக்கல்ஸை கட்டுப்படுத்தும். புற்றுநோயிலிருந்து காக்கும்.

*இதில் உள்ள கால்சியம் எலும்புகள் பற்கள், ஈறுகளுக்கு நல்லது.

*தாமிரம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளதால், ரத்த நாளங்கள், எலும்பு மூட்டுகளுக்கு நல்லது.

*சீரான எடைப் பராமரிப்புக்கு மிகவும் ஏற்றது.

*இதில் உள்ள மக்னீசியம் மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் ஸ்ட்ரெஸ், பதற்றத்தைப் போக்கும்.

பாதாம்

*புதிய ரத்த செல்களின் உருவாக்கத்துக்கு உதவும். ஹீமோகுளோபினை அதிகரிக்கும். உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு உதவும்.

*இதில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் புற்றுக்கட்டிகளைக் கட்டுப்படுத்தும். குறிப்பாக, நுரையீரல், ப்ராஸ்டேட், மார்பகப் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்.

*எடை குறைக்க நினைப்போருக்கு ஏற்றது.

*கொரோனரி ஆர்ட்டரி பிரச்னைகளில் இருந்து காக்கும்.

*மலச்சிக்கலைப் போக்கும்.

*காம உந்துதலை மேம்படுத்தும்.

*தலையின் ஸ்கால்ப் பகுதியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால், கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். பட்டுப்போன்ற பொலிவான சருமத்துக்கு உதவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சோளம் வைத்திய வளம்!! (மருத்துவம்)
Next post அன்பானவர்களை இணைக்கும் ரெஸ்டரேஷன் ஆர்ட்!! (மகளிர் பக்கம்)