உடலுறவுக்குப் பின் ஏன் கட்டாயம் இதை செய்ய வேண்டும்?..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:3 Minute, 47 Second

கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல், அன்பாகப் பேசிக்கொண்டிருத்தல் போன்றவற்றிற்குப் பிறகு எப்படி மனநிலை இருக்கும். எப்படி அதை எதிர்கொள்வது என்பது பெரும்பாலும் தெரிந்த விஷயம் தான். ஆனால் உடலுறவுக்குப் பின் பெண்கள் தங்களுடைய பிறப்புறுப்புக்களில் நடக்கும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியாது.

உடலுறவுக்குப் பின் நடக்கும் பிறப்புறுப்பு மாற்றங்கள் பற்றியும் பிறப்புறுப்புக்களை எப்படி பராமரிப்பது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

உடலுறவுக்குப் பின் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பின் அடுத்த வேலையைச் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

ஆனால் உடலுறவுக்குப் பின் பிறப்புறுப்புக்களை முறையாகப் பராமரிப்பது அவசியம்.

உறவுக்குப் பின் ஈரம் குறையாமலே இருப்பது மேலும் மேலும் உங்கள் அன்பை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். ஈரமாக இருக்கும் பிறப்புறுப்பை டிஸ்யூ அல்லது மென்மையான துணி கொண்டு துடைத்துவிட்டு கழுவி சுத்தம் செய்வது நல்லது. அதற்குப் பின் குளிக்கலாம்.

பிறப்புறுப்பை உலர்வாக வைத்திருத்தல் வேண்டும். அதனால் வெதுவெதுப்பான நீர் கொண்டு சுத்தம் செய்வது முக்கியம்

உடலுறவுக்குப் பின் சிறுநீர் கழித்துவிட்டால் நோய்த்தொற்றுக்கள், பாக்டீரியாக்கள் அண்டாது என்று பலரும் நம்புகிறார்கள். அதேசமயம் உறவுக்குப் பின் சிறுநீர் வரவில்லையென்றால் அதற்காக சிரமப்படத் தேவையில்லை. சிறுநீர் கழிக்கும் எண்ணம் தோன்றினால் அதைச் செய்வது நல்லது.

உறவுக்குப் பின் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். அது பிறப்புறுப்பு சுத்தமாக இருப்பதற்கும் தண்ணீர் குடிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் தண்ணீர் நிறைய குடிப்பதால் உடலில் நீர்த்தன்மை அதிகரிக்கும். அது உங்கள் உடலின் பிஎச் அளவை சீராக பராமரிக்க உதவும்.

உறவுக்குப் பின் சிறந்த ஆரோக்கியமான உணவை உண்பது நல்லது. குறிப்பாக, உடலுறவுக்குப் பின் தயிர் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஏனெனில் தயிரில் தான் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கின்றன. அதனால் ஈஸ்ட் தொற்றுக்கள் உண்டாகாமல் பாதுகாக்கும்.

மென்மையான உள்ளாடைகளை அணிவது மிக அவசியம். அது உறக்கத்தின் போது சுவாசத்தைச் சீராக்கும்.

உறவுக்குப் பின், பாத் சால்ட் சேர்த்த வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். அது உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கச் செய்வதோடு நல்ல உறக்கத்தையும் தரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடலுறவில் பெண்களின் உச்சம் பற்றி ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பவுண்டரிகளை குழந்தைகள் உருவாக்குவதில்லை! (மருத்துவம்)