டயாபட்டீஸ் டயட்!!! (மருத்துவம்)

Read Time:11 Minute, 34 Second

எது எனக்கான டயட்?!

நீரிழிவு என்றாலே பயம் கொள்ள வேண்டியதில்லை. முறையான உணவுப்பழக்கத்தைப் பின்பற்றும்போது நீரிழிவை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இயல்பான வாழ்க்கையை நிச்சயம் வாழ முடியும். இந்த இதழில் நீரிழிவாளர்களுக்கான உணவுமுறை எதுவென்பதைப் பார்ப்போம்…கணையத்தின் பீட்டா செல்கள் இன்சுலின் சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும். இதுதான் டயாபடீஸ் மேலிட்டஸ் (Diabetes Mellitus) அல்லது நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. Diabetes Mellitus என்பது ஒரு கிரேக்க (Greek) வார்த்தை.

நீரிழிவு நோயின் வகைகள்

Type 1 – Insulin Dependent Diabetes Mellitus

குழந்தைகள் மற்றும் இளமை பருவத்தில் இருப்பவர்கள் மட்டும் பாதிக்கப்படுவார்கள். இதில் பீட்டா செல்கள் கணையத்தின் மூலம் உற்பத்தி ஆகாது. உடலில் இன்சுலின் சுரக்காது, அவர்கள் தினமும் இன்சுலின் ஊசிகளை உடலில் செலுத்தி உயிர் வாழ வேண்டும். இன்சுலின் எடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு உடலில் நிறைய பிரச்னை உண்டாகும்.

Type 2- Non Insulin Dependent Diabetes Mellitus

உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு இன்சுலின் உற்பத்தி கணையத்தில் அதிக அளவு ஏற்படும். (Insulin Resistance) இதை குணப்படுத்த அவர்கள்
உடற்பயிற்சி, முறையான டயட் மற்றும் மாத்திரைகளை எடுக்க வேண்டும்.

Type 3 – Malnutrition Related Diabetes Mellitus

பொதுவாக 15 வயதில் இருந்து 30 வயதானவர்கள் வரை இதில் பாதிக்கப்படுவார்கள். ஒல்லியான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள். கணையத்தில் இன்சுலின் சுரக்காமல் இருப்பதே இதற்கு காரணம்.

Impaired Glucose

இதை எப்படி கண்டுபிடிப்பது என்றால் 75 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்ட பிறகு வெறும் வயிற்றில் 1½ – 2 மணி நேரத்திற்குப் பிறகு ரத்த சர்க்கரையின் அளவை பார்க்க வேண்டும். அது அதிகரித்து இருந்தால் Impaired glucose tolerance என்று அழைக்கப்படும். இவர்களுக்கு சர்க்கரை நோய் இப்பொழுது உண்டாவது சில வருடங்களுக்குப் பிறகுதான் வரக்கூடும்.
Gestational Diabtetes

கர்ப்ப காலத்தில் உண்டாகும் சர்க்கரை நோய்தான் Gestational diabetes என்று அழைக்கப்படும். பெரும்பாலும் குழந்தை பிறந்த பிறகு இந்த சர்க்கரை நோய் சரி ஆகிவிடும். சிலருக்கு இந்த வகை நீரிழிவு நிரந்தரமாகவும் ஆகிவிடலாம்.

சர்க்கரை நோயை உண்டாக்கும் காரணங்கள்

Type 1 Diabetes மரபணுக்கோளாறால் உண்டாகும். எல்லா வயதானவர்க்கும் வரக்கூடும். பெண்களைவிட ஆண்கள்தான் அதிக பாதிப்பு கொண்டவர்கள். ஜங்க் ஃபுட் உண்பது, நார்ச்சத்து குறைவாக சாப்பிடுவது ஆகியவை உணவுப்பழக்கத்தின் அடிப்படையிலானது. Infections Viral infection போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் காரணங்களாலும் இன்சுலின் சுரப்பது குறைந்துவிடும். அதிக மன அழுத்தமும் நீரிழிவுக்கு காரணம்.  அதிக அளவு தைராய்டு ஹார்மோன் சுரக்கும்போது சர்க்கரை நோய் உண்டாகும்.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

இரவில் அதிக அளவு சிறுநீர் கழிப்பது, அதிக அளவு தண்ணீர் தாகம் எடுப்பது, இனிப்பு பொருள் மேல் அதிகளவு ஈர்ப்பு ஏற்படுவது, எடை குறைதல்(அதிக உணவு சாப்பிட்டாலும் எடை குறைவு ஏற்படும்.) உடல் சோர்வு, மயக்கம் போன்ற அறிகுறிகள் வரக்கூடும். தூக்கம் சரியாக இருக்காது. அதிகளவு சர்க்கரையினால் கண் பார்வை குறைவு ஏற்படும்.

புண் ஆறாமல் இருப்பது உடலில் காயம் ஏற்பட்டால் புண் சீக்கிரமாக ஆறாது. சர்க்கரை நோயை எவ்வாறு கண்டறியலாம்?வெறும் வயிற்றில் வாயில் 75g குளுக்கோஸ் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து சர்க்கரை நோயைக் கண்டறியலாம். இதற்கு Oral Glucose Tolerance Test என்று பெயர்.சர்க்கரை நோய் சிறுநீரில் எவ்வளவு உள்ளது என்று பார்க்க வேண்டும். அதன் அளவு 180mg/dl மேல் இருந்தால் சர்க்கரை நோய் இருக்கிறது என்று அர்த்தம். இது Urinary Sugar test வகையாகும்.

Glycalated haemoglobin என்பது கடந்த மூன்று மாதத்தின் சர்க்கரை அளவை குறிக்கும். Normal Value 4.6 – 6.4% அதற்குமேல் இருந்தால் சர்க்கரை நோய் எனப்படும்.

சர்க்கரை நோயின் சிக்கல்கள்

ரத்த சர்க்கரை அதிகரிப்பு (Hyperglycemia)  

உணவு சாப்பிட்ட பிறகு சர்க்கரையின் அளவு 140 mg/dl மேல் இருந்தால் Hyperglycemia என்று அழைக்கப்படும். இதை சரி செய்ய வேண்டும் அல்லது உடலில் மற்ற உறுப்புகளை பாதிப்பு அடையச் செய்து பின்னர் இறந்து விடுவார்கள்.

ரத்த சர்க்கரை குறைவு (Hypoglycemia)

சராசரி ரத்த சர்க்கரை அளவை விட மிகவும் குறைவாக சென்றுவிடுவது Hypoglycemia எனப்படுகிறது. இதன் அறிகுறி தலைவலி, தலை சுற்றல், கை கால் நடுக்கம், வேர்த்து கொட்டுவது, படபடப்பு, கண் பார்வை குறைவு. இந்த நேரத்தில் 15 கிராம் அல்லது 3 டீஸ்பூன் சர்க்கரை அல்லது குளுக்கோஸ் வாயில் போட வேண்டும். இதை சரி செய்யவில்லையென்றால் கோமா நிலைக்குச் செல்லும் அபாயம் ஏற்படும்.

கீட்டோ அசிடோசிஸ் (Ketoacidosis)

உடலில் அதிக அளவு ரத்தத்தில் கீட்டோன்ஸ் சுரப்பதினால் ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.நீண்ட நாட்கள் சர்க்கரை நோயை குணப்படுத்தவில்லையென்றால் கண் பார்வை பாதிப்பு அடையும். இதை Retinopathy என்கிறோம். மேலும் நரம்புகளைப் பாதிக்கிற Neuropathy, சிறுநீரகத்தை பாதிப்பு அடையச் செய்யும் Nephropathy போன்ற பிரச்னைகள் வரக்கூடும். மேலும் பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் தொற்றுகள் ஏற்படும் சாத்தியமும் உண்டு.

Dietary Management

உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்பவை பச்சைக் காய்கறிகள்(பூமிக்கு மேல் விளைந்தவை), கீரை வகைகள், பாகற்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், காலிஃப்ளவர், வாழைத்தண்டு, வாழைப்பூ, கோவைக்காய், சுண்டைக்காய், பீன்ஸ், அவரைக்காய், செளசௌ, நூல்கோல், கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகளை அடிக்கடி உண்ண வேண்டும். ஓட்ஸ், கோதுமை, பார்லி, சிறுதானியம் இவை நார்ச்சத்து மிகுந்தவை. சாத்துக்குடி, ஆப்பிள், கொய்யாப்பழம், பேரிக்காய், ஆரஞ்சு, பப்பாளி இவைகளில் ஏதேனும் ஒன்று ஒரு நாளைக்கு சாப்பிடலாம். அசைவ உணவில் முட்டை வெள்ளைக்கரு, மீன், கோழிக்கறி தோல் எடுத்தது உட்கொள்ளலாம். டீ, காபி, சூப், மோர் போன்றவற்றையும் பயன்
படுத்தலாம்.

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்கள்

நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், மக்காசோள எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் இவைகளில் ஏதேனும் ஒரு எண்ணெயை பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு 4-5 தேக்கரண்டி பயன்படுத்தவும்.உணவில் அளவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டியவைசோள மாவு, கிழங்கு வகைகள், பீட்ரூட், கேரட், சாதம், ரொட்டி, ரவை, பிஸ்கட். இறைச்சி வகைகளில் ஆடு, மாடு, பன்றி போன்றவை. பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளில் கொழுப்பு குறைவாக உள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்.

உணவில் தவிர்க்க வேண்டியவை

வெள்ளை சர்க்கரை, தேன், வெல்லம், ஜாம், இனிப்பு பண்டங்கள், பேக்கரி உணவுகள், கேக், க்ரீம் பிஸ்கட், பட்டர் பிஸ்கட், பன், பழச்சாறு, குளிர்பானங்கள், டின் உணவுகள், பாட்டில் பானங்கள், ஐஸ்கிரீம், ஜெல்லி, ஊட்டச்சத்து பானங்கள். வெண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், எண்ணெய் அதிகம் உள்ள ஊறுகாய், பலகாரங்கள்.

மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா, சீத்தாப்பழம், பேரீச்சை.மதுபானங்களில் வெறும் கலோரியைத் தவிர வேறு எந்தவிதமான ஊட்டச்சத்தும் இல்லை. எனவே மது அருந்துவதைத் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மைதா மாவு, ஜங்க் உணவுகளும் தவிர்க்க வேண்டியவையே!

முக்கிய குறிப்புகள்

விரதம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் விருந்து உணவுகளையும் தவிர்க்க வேண்டும். தினமும் 10 முதல் 12 கிளாஸ் தண்ணீர் அருந்தவும். மூன்று வேளை உணவு உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்கவும். உணவின் அளவை கவனத்தில் வைக்கவும். நேரத்திற்கு சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று, சுவைத்து உண்ண வேண்டும்.

உடற்பயிற்சி செய்வது அவசியம். Saccharin, Aspartame, Acesulfame K போன்ற செயற்கை இனிப்புகளை மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்தலாம். வேப்ப இலை, வெந்தயம், பட்டை பொடி, பூண்டு, இஞ்சி, பாகற்காய், பெர்ரி பழங்கள், முருங்கை இலை, நெல்லிக்காய், ஆப்பிள் சிடர் வினிகர், கற்றாழை போன்றவை சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் இயற்கை உபாயங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நீரிழிவு நோயாளிகளின் நண்பன் பீன்ஸ்!! (மருத்துவம்)
Next post கிராமங்களில் அதிகரிக்கும் நீரிழிவு!! (மருத்துவம்)