வான்கோழி பிரியாணி!!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 27 Second

தேவையானவை

வான்கோழி கறி 1 கிலோ
பாஸ்மதி அரிசி 1 கிலோ
வெங்காயம் 4 (பொடியாக நறுக்கியது)
தக்காளி 4 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் 10 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது 4 மேசைக்கரண்டி
தயிர் 4 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை 1/2 கிண்ணம்
புதினா 1/2 கிண்ணம்
எண்ணெய் 8 மேசைக்கரண்டி
பட்டை 4
ஏலக்காய் 2
கிராம்பு 6
பிரியாணி இலை – 2
சோம்பு தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
வர மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 4 தேக்கரண்டி
மிளகு தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு 2 மேசைக்கரண்டி
தண்ணீர் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு.

செய்முறை

சுத்தம் செய்த வான்கோழிக் கறியை, எலுமிச்சை சாறு, உப்பு, கருப்பு மிளகு தூள் சேர்த்து கலந்து வைக்கவும். குளிர்சாதன பெட்டியில் 2 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வைக்கவும். இதனால் கறி நன்றாக வேகும். கூடுதல் சுவை கொடுக்கும். பாஸ்மதி அரிசியை கழுவி குறைந்தது 30 நிமிடங்கள் ஊற விடவும். குக்கர் அல்லது அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய் சேர்க்கவும். மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் தக்காளி சேர்க்கவும். தக்காளி நன்றாக குழையும் வரை வதக்கவும். ஊற வைத்த வான்கோழி கறியை சேர்த்து 3-4 நிமிடங்கள் அதில் உள்ள தண்ணீர் வற்றி துண்டுகள் நிறம் மாறும் வரை வதக்கவும். தயிர் சேர்த்து மசாலா பொருட்கள் சேர்க்கவும் (மஞ்சள் தூள், வர மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சோம்பு தூள்) நன்றாக கலந்து விடவும். 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். 5-6 விசில்கள் விடவும். அடி கனமான பாத்திரத்தில் தயாரித்தால் மூடிவைத்து கறியை நன்றாக வேகவிடவும். இதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் ஆகும். குக்கர் ஆறிய பின்னர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து மீதமுள்ள தண்ணீரை சேர்க்கவும். கறி வெந்து தண்ணீர் கொதித்தவுடன் ஊறவைத்த அரிசி சேர்த்து கிளறிவிடவும். அடுப்பை குறைத்து குக்கரை மூடி 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து இறக்கினால் வான்கோழி பிரியாணி தயார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வெந்தயக்கீரை அடை!! (மகளிர் பக்கம்)
Next post ஆரஞ்சு தேன் ஜூஸ்!! (மகளிர் பக்கம்)