மூளை எனும் கணிப்பொறி! (மருத்துவம்)

Read Time:3 Minute, 29 Second

தலைவலி மூளையுடன் சம்பந்தப் பெற்றிருப்பதனால் மூளையின் அமைப்பைப் பற்றியும் அதன் செயல்கள் பற்றியும் அறிந்து கொள்ளுதல் உபயோகமானது.மூளையும் தண்டுவடமும் சேர்ந்ததுதான் நரம்பு மண்டலம். இவை மூன்றடுக்கு உறையால் போர்த்தப்பட்டிருக்கும். இந்த உறைக்கு ‘மெனிஞ்சஸ்’ என்று பெயர்.

*மூளை, கபாலத்தின் உள்ளே மிகவும் பத்திரமாக மிதந்துகொண்டிருக்கிறது. கபாலத்துடன் உராய்ந்து விடாமல் இருக்க மூளைத் தண்டுவடத் திரவம் மூளையைப் பாதுகாக்கிறது.

*உடலின் வலது பகுதியை இடப்பக்க மூளையும், இடதுபகுதியை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகின்றன.

வலதுபக்க மூளையின் செயல்கள்

1.சைகை மொழித் தகவல் பரிமாற்றம் உடல் அசைவுகள் மூலம் தகவல் பரிமாற்றம், தொடுதல் மற்றும் பகுத்தறிவு.

2.சிறு தகவல்களை ஒருங்கிணைத்து முழுமையான தகவல்களைப் பெறுதல்.

3.உணர்வுகள் மற்றும் கற்பனைகளைப் புரிந்துகொண்டு செயல்படுதல்.

4.கலை உணர்வு மற்றும் படைப்பு ஆற்றல்களை வெளிப்படுத்துதல்.

5.கற்பனை, நுண்ணறிவு, கலை ஆர்வம், இசையில் நாட்டம், முப்பரிமாண உணர்வு போன்ற திறமைகள் வளர்ச்சி அடைவதுடன் உடலின் இடதுபக்க இயக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது.

இடது பக்க மூளையின் செயல்கள்

1.சொற்கள், பெயர்கள், கருத்துகள்

2.செய்திகளை ஆராய்ந்து, பகுத்து, ஒழுங்கு படுத்துதல்

3.முடிவுகளை எடுப்பதற்கு ஆய்ந்து செயல்படுதல்

4.சிந்தனை ஆற்றல்

5.ஊகம், அறிவியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் ஆர்வம்,

இசையில் நாட்டம், முப்பரிமாண உணர்வு போன்ற திறமைகள் வளர்ச்சி அடைவதுடன் உடலின் வலதுபக்க இயக்கமும் கட்டுப்படுத்தப்படுகிறது. சாதாரணமாக எல்லோருக்கும் மூளையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அதனால்தான் வலதுபக்க உறுப்புகளை அதிகம் உபயோகிக்கிறோம். சிலருக்கு இடதுகைப் பழக்கம் உண்டு. அவர்களுக்கு மூளையின் வலது அரைக்கோளத்தின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம்.

மூளையில் வலியுணரிகள் இல்லாததால், மூளை வலியை உணராது. தலைப் பகுதியில் அமைந்த சில நரம்புத் தொகுதியின் பகுதிகள், தொண்டை, முகம், வாய் போன்ற பகுதிகளில் காணும் சில நரம்புகள் என்பன காயப்படக் கூடியவை. மூளையுறை, குருதிக் கலங்கள் என்பன வலியை உணரக்கூடியவை. தலைவலிகள் பெரும்பாலும், மூளையுறையில் அல்லது குருதிக்கலங்களில் ஏற்படக்கூடிய இழுவை அல்லது உறுத்தல் காரணமாக உண்டாகின்றன. தலையில் காணப்படும் தசைநார்களும் வலியை உணரக்கூடியவை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மஞ்சள் முகமே வருக!! (மருத்துவம்)
Next post செக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…!! (அவ்வப்போது கிளாமர்)