மஞ்சள் முகமே வருக!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 24 Second

*தினமும் 1 தேக்கரண்டி கடலை மாவுடன் மஞ்சள் தூள் சேர்த்து, தண்ணீர் விட்டு கலந்து, உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகவும், அழகாகவும் மாறும்.

*பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து, அதனை உடல் முழுவதும் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து பின் கடலை மாவு பயன்படுத்தி குளித்துவர, சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.

*மோருடன் சிறிது மஞ்சள் தூளை சேர்த்து, முகத்தில் தேய்த்தால், சுருக்கங்கள் வராமல் இருக்கும்.

*கழுத்து, கணுக்கால்களில் கருமையைப் போக்க மஞ்சள் தூளை தயிரில் கலந்து தடவி வரலாம்.

*சருமத்தில் உள்ள தழும்புகளை போக்கி, அழகான சருமத்தை பெறுவதற்கு, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து கலந்து தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவினால் சருமத்தில் உள்ள தழும்புகள் மறைந்து அழகான சருமத்தை பெறலாம்.

*உடலில் வளரும் தேவையில்லாத முடியை எளிதில் நீக்குவதற்கும், வளராமல் தடுப்பதற்கும், ஆலிவ் எண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து உடலில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

*பாதங்களில் இருக்கும் வெடிப்புக்களை போக்குவதற்கு, தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, வெடிப்புள்ள பகுதியில் தடவி வந்தால், விரைவில் வெடிப்புக்கள் நீங்கி, பாதங்கள் மென்மையாக இருக்கும்.

*வெளியே வெயிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், பொலிவிழந்து இருக்கும் முகத்தை பொலிவாக்குவதற்கு, வெள்ளரிக்காய் சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தடவி மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

*எலுமிச்சைச் சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி வந்தால், வெயிலால் மாறியிருந்த சருமத்தின் நிறம், மீண்டும் பழைய நிறத்திற்கு திரும்புவதோடு, சருமமும் பொலிவோடு மென்மையாக இருக்கும்.

*தோலில் வெப்பத்தை உண்டாக்கி, கிருமிகளை அகற்றும் தன்மை மஞ்சளுக்கு உண்டு என்பதால், தோல் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மஞ்சள் சிறந்த நிவாரணி ஆகும். எனவே,, மஞ்சளை தினமும் குளிக்கும்போது பூசி வந்தால் தேமல், சொறி, சிரங்கு போன்ற தோல்நோய்கள், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவை நீங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மணப்பெண்கள் விரும்பும் நகாஸ் நகைகள்!! (மகளிர் பக்கம்)
Next post மூளை எனும் கணிப்பொறி! (மருத்துவம்)