தேனின் வகைகளும் பயன்களும்!! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 50 Second

*தேன்: பித்தம், வாந்தி, கபம், வாயு, ரத்தத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கும்.

*பழைய தேன்: வாத ரோகம், வயிறு எரிச்சல், வாதமூல ரோகம் போன்றவற்றை உண்டாக்கும். புளிப்பும், இனிப்பும் கொண்ட இந்த தேன் மருந்தின் குணங்களை மாற்றும்.

*புதிய தேன்: நீண்ட ஆயுளும், மேனி உஷ்ணமும், உடல் பொலிவும் உண்டாக்கும். புதிய தேனை அதிகம் உட்கொண்டால் ருசியின்மையும், நெஞ்சில் கபமும் உண்டாகும்.

*கொம்புத்தேன்: மரக்கொம்புகளில் கூடுகட்டும் தேன். முத்தோஷங்களையும், உள் மாந்தையையும் நீக்கும்.

*மலைத்தேன்: சுவாச காசம், சிலேஷ்ம காசம், விக்கல், ஜுரம், தேகக்கடுப்பு ஆகியவற்றை குணமாக்கும். நல்ல தொனி கிடைக்கும்.

*மரப்பொந்து தேன்: உஷ்ணம் உண்டாகும். விக்கல் நீங்கும். இருமல், சுவாச கோளாறுகள், ரோகம் ஆகியவை நீங்கும்.

*மனைத்தேன்: புரையோடிய புண், கரப்பான், புழுவெட்டு, காசம் ஆகியவை மறையும்.

*புற்றுத்தேன்: ஈளை, இருமல், கபதோஷம், கண் நோய்கள் ஆகியவை புற்றில் கட்டும் தேனால் குணமாகும்.

*பாறைத்தேன்: காட்டுத்தேனீக்களால் பாறைப் பொந்துகளில் சேர்க்கப்படும் அரிய வகை தேனாகும். வெளுத்த மஞ்சள் நிறமுள்ளது. பல ஆண்டுகள் கடந்தாலும் கெடாமலிருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தலைச்சுற்றல் தீர்வு என்ன ? (மருத்துவம்)
Next post மணமகள் கையை அலங்கரிக்கும் போர்ட்ரெட் மெஹந்தி! (மகளிர் பக்கம்)