அத்திப்பழத்தின் மகத்துவம்!! (மருத்துவம்)
*உலர்ந்த அத்திப்பழங்களில் அதிக கால்சியம், செம்பு, பொட்டாசியம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், செலினியம் போன்ற சத்துக்கள் அதிகமான அளவில் உள்ளன. தினமும் சாப்பிட்டு வந்தால் கால்சியம் குறைபாட்டினால் ஏற்படும் நோய்களை தவிர்க்கலாம்.
*அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகமிருப்பதால் எளிதில் செரிமானம் செய்து நம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தங்காமல் தடுக்கிறது.
*உடல் பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க அத்திப்பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
*மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தான இப்பழம் இருமல், தொண்டை எரிச்சலை கட்டுப்படுத்துவதுடன் கல்லீரல் வீக்கத்தையும் குணப்படுத்தும்.
*அத்திப்பழம் கர்ப்பப்பைக்கு வலுவைத் தரக்கூடியது.
*நரம்புத்தளர்ச்சி, ஆஸ்துமா, தோல் சம்பந்தமான நோய்கள், மூலநோய், கண் பார்வை குறைபாடுகள், மூளைக் கோளாறுகள் போன்ற பாதிப்புடையவர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழம்.
*பித்தத்தை தணிக்கும். செரிமானப் பிரச்னையால் உண்டாகும் வயிற்று உபாதைகளை நீக்கும்.
*ரத்தத்தில் அதிகமான கொழுப்பு,அல்சரை போக்கும்.
*வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
*தினமும் 2 அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடல் வளர்ச்சியடையும்.
*நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக சிறுநீர் வெளியேறும்போது ஏற்படும் கால்சியம் குறைபாட்டை சரி செய்யும்.
*உடல் பொலிவு பெறவும், தலைமுடி நன்கு வளரவும், இளமை நீடிக்கவும் அத்திப்பழம் சாலச்சிறந்தது.