
பளிச்… பளிச்… பற்கள்!! (மகளிர் பக்கம்)
பெண்கள் பற்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும், பளிச்சென்று இருக்கும்படியும் வைத்துக்கொள்வது அவசியம். பற்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் முக அழகு கூடும். அவற்றுக்கு சில எளிய டிப்ஸ்…
*பல் தேய்க்கும் பிரஷ்ஷில் உப்பை சிறிதளவும், எலுமிச்சை சாறு சில சொட்டுக்களும் சேர்த்து பல் துலக்கினால் பற்களில் ஏற்படும் மஞ்சள் நிறம் மாறும்.
*கேரட்டை பச்சையாகக் கடித்து சாப்பிட்டால் பற்கள் பலம் பெறும்.
*புதினா இலையை காய வைத்து, பொடி செய்து, அதைக்கொண்டு பல் துலக்கினால் பற்கள் பளிச்சென்று மின்னும்.
*எலுமிச்சம்பழத் தோல்களை காய வைத்து, தூளாக்கி, உப்பு சேர்த்து, பற்களை துலக்கினால் பற்கள் பளபளவென மாறும்.
*முல்தானி மெட்டியை பற்களின் மேல் தேய்த்து வந்தால் பற்களின் மஞ்சள் நிறம் மாறும்.
* பச்சை நெல்லிக்காயை பற்களால் கடித்து தின்றால் பற்களில் உள்ள கறை நீங்கும்.
*மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
*சாப்பிட்ட பின்பு உப்பு கலந்த நீரால் கொப்பளித்தால் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது.
அழகை கூட்டும் விரல், நகங்கள்
பெண்களை மேலும் அழகுப்படுத்தி காட்டுபவை அவர்களின் கை விரல்கள் மற்றும் நகங்கள். அவைகளை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வது அவசியம். அவற்றுக்கு சில எளிய டிப்ஸ்….
*விரல்கள் மற்றும் நகங்கள், சொர சொரப்பு நீங்கி பளபளப்பாக இருக்க நல்லெண்ணெயை கொண்டு மசாஜ் செய்து வரவேண்டும்.
*ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து, ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.
*முருங்கைக்கீரை, பப்பாளிப்பழம், மாம்பழம், பேரீட்சம்பழம் போன்ற உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் நகம் பாதுகாப்பாக இருக்கும்.
* இளஞ்சூடான நீரில் துளசி மற்றும் புதினாவை போட்டு விரல்களை பத்து நிமிடங்கள் வைத்தால் நகம் சுத்தமாகும்.
*நகங்களை சுற்றி தடித்து, வலியிருந்தால் வெது வெதுப்பான நீரில் டெட்டால், பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, கழுவினால் வலி நீங்கி நகம் சுத்தமாவதோடு, பொலிவுடன் திகழும். விரல், நகங்களை பாதுகாப்போம், வனப்போடு திகழ்வோம்.