இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட பிரிட்டன் வலியுறுத்தல்

Read Time:1 Minute, 52 Second

இலங்கையின் வடக்கில் ஏற்பட்டுவரும் உக்கிர மோதல்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள பிரித்தானிய அரசு, அங்கே சிவிலியன்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த உடனடி யுத்தநிறுத்தமொன்று ஏற்படவேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது. இலங்கையில் போர் நிறுத்தம் வர வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சேர்ந்து அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளும் கோரிவருகின்றன என்றும் ஐ.நா.மன்றமும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சரால் சனிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தப் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்களை விடுவிக்கும் நோக்கில் இலங்கை அரசுடனும் விடுதலைப் புலிகளுடனும் உடன்பாடொன்றை எட்டும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தற்போது ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிடும் அந்த அறிக்கை, இது தொடர்பில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா. தலைமை செயலரின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார், தனது பயணம் குறித்த அறிக்கை ஒன்றை ஐ.நா.மன்றப் பாதுகாப்பு சபையில் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட பிரிட்டன் வலியுறுத்தல்

  1. ஏன் தலைவர் மாவீரர் தின உரையில்… சிங்களத்தை நம்ப முடியாது…என்றும் சிங்களத்துக்கு ஒரு குறுகிய கால அவகாசமும் குடுக்கும் பொது எங்கே இந்த லண்டன் காரர்? எங்கே இந்த புலம் பெயர் வால்கள்?

Leave a Reply

Previous post நோர்வே அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் -அஸ்கிரிய தேரர்!
Next post உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பங்கள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சந்திப்பு