பயங்கரவாதம் ஒழித்துக் கட்டப்படும்வரை புலிகளுடன் எந்தவொரு உடன்படிக்கைக்கும் போகப் போவதில்லை -இராணுவத் தளபதி

Read Time:1 Minute, 53 Second

படையினர் தற்போது பாதுகாப்பு வலயத்தினுள் உட்பிரவேசித்துள்ளனர். புதுமாந்தளன் வாவிப்பகுதியின் ஊடாக நேற்றிரவு படையினர் இந்தப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளனர் என்று தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். அதேசமயம் இப்பகுதியில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த 03 கிலோமீற்றர் நீளமான மண்அரண் ஒன்றையும் படையினர் கைப்பற்றியுள்ளனர். படையினர் இந்தப் பகுதிக்குள் உட்பிரவேசித்ததையடுத்து ஏராளமான பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். பொதுமக்களுக்கிடையில் ஒழித்திருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள புலிகளின் தலைவர் முயற்சித்துள்ளார். எனினும் புலித்தலைவர் தப்பியோடுவதற்கான எந்தவொரு வழியையும் விட்டுக்கொடுக்காது அவரை அழித்தொழிப்பதற்காக முழு அர்ப்பணிப்புடன் படையினர் முன்னேறி வருகின்றனர். பயங்கரவாதம் முற்றாக ஒழித்துக் கட்டப்படும்வரை புலிகளுடன் எந்தவொரு உடன்படிக்கைக்கும் போகப்போவதில்லையென்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. புலிகள்வசம் சிக்கியுள்ள பொதுமக்களை விடுவிப்பதற்காக படையினர் தம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் பிடியில் சிக்கியிருந்த 35ஆயிரம் பேர் விடுவிப்பு -ஜனாதிபதி
Next post தேசிய பிரச்சினை தொடர்பில் எந்தவொரு நபரும் நிபத்தனை விதிக்க முடியாது -பாதுகாப்புப் பேச்சாளர்