பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட சுமார் 40 வெளிநாட்டவர்கள் கொழும்பு மிரிகானை தடுப்பு முகாமில்..

Read Time:1 Minute, 25 Second

பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட சுமார் 40வெளிநாட்டவர்கள் கொழும்பு மிரிகானை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் விசா இன்று நாட்டில் தங்கியிருந்ததால் கைதுசெய்யப்பட்டதாக திணைக்களத்தின் உதவி குடியகல்வு குடிவரவு கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. தெய்வேந்திரராஜா தெரிவித்துள்ளார். இவர்களில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். மீண்டும் தமது சொந்த நாடுகளுக்கு திரும்புவற்கான விமானப்பயணச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்களிடம் போதுமானஅளவு பணமில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர்களை தமது சொந்த நாடுகளுக்கு திருப்பியனுப்ப முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விடுதலைப் புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்டுவரும் தொடர் போராட்டங்களால்.. தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ள முடியாது: நோர்வே
Next post விடுதலைப்புலிகளுடன் பேசுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது -ரணில் விக்கிரமசிங்க