விடுதலைப்புலிகளுடன் பேசுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது -ரணில் விக்கிரமசிங்க

Read Time:2 Minute, 30 Second

விடுதலைப்புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டபோது தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் புதிய அனைத்துலக தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதனுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு தான் விரும்புவதாக அரச தலைவரின் மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்திருக்கிறார் எனவும் நீர்கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சார கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். அரசாங்கத்தின் இந்த பிந்திய நகர்வு தொர்பாக அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கேள்வியெழுப்பவதாக தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க அரச தலைவருடன் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு தான் தயாராக இருந்தபோதிலும் அரச தலைவர் துரதிஷ்வசமாக அதனை தவிர்த்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நன்மையளிக்கமூகூடிய வகையில் அவர்களுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையை தான் கைச்சாத்திட்டதாக அரசாங்கம் என்மீது குற்றச்சாட்டை சுமத்துகிறது எனக்குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க நான் அவ்வாறு செய்திருந்தார் விடுதலைப்புலிகள் என்னைதான் அரச தலைவராகியிருப்பார்கள் ஆனால் அவர்கள் அரசதலைவர் தேர்தலில் என்னைதோற்கடிக்கும் வரையில் தேர்தலில் என்னை தோற்கடிக்கும் வகையில் செயற்பட்டது நான்தேசத்துக்கு துரோகம் செய்யவில்லை என்பதையே புலப்படுத்துகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல்வேறு காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட சுமார் 40 வெளிநாட்டவர்கள் கொழும்பு மிரிகானை தடுப்பு முகாமில்..
Next post French Police Manhandled the FrenchTamil Diaspora & Arrested 210 LTTE supporters (VIDEO)