வவுனியா பெண்நோயியல் நிபுணர் சுட்டுக்கொலை

Read Time:1 Minute, 41 Second

வவுனியா பொது வைத்தியசாலையின் பெண் நோயியல் நிபுணராகிய (வீ.ஓ.ஜி)) டாக்டர் மீரா மொஹீதீன் நேற்றுமாலை 7.00மணியளவில் தோணிக்கல் தனியார் வைத்தியசாலைக்கு அருகில் வைத்து இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டு காயத்துக்கு உள்ளான அவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது வவுனியா வைத்தியசாலையில் நீண்டகாலம் பணியாற்றி வந்த டாக்டர் மீரா மொஹீதீன் வவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது வைத்திய நிபுணர் மீரா மொஹீதீன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அரச வைத்தியர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வரும் அதேவேளை வவுனியா நகரப்பகுதியில் படையினர் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post French Police Manhandled the FrenchTamil Diaspora & Arrested 210 LTTE supporters (VIDEO)
Next post புதுமாத்தளன் வைத்தியசாலைப் பகுதியை இன்று தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக இராணுவம் தெரிவிப்பு