முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பலின் மூலம் ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையுடன் நேற்று 516பேர் புல்மோட்டைக்கு வருகை

Read Time:1 Minute, 44 Second

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பலின் மூலம் ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையுடன் நேற்று 516பேர் புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். புல்மோட்டையிலிருந்து நேற்றுக்காலை 6மணிக்கு புறப்பட்ட மேற்படி கப்பல் முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து மாலை 4.30க்கு திரும்பி இரவு 7.40க்கு புல்மோட்டையை அடைந்துள்ளது. இதில் அழைத்து வரப்பட்ட கடும் காயங்களுக்குள்ளான 164பேருக்கு புல்மோட்டையிலுள்ள இந்திய கள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இவர்களுடன் நோயாளர்களும் பராமரிப்பாளர்கள் உறவினர்கள் என 352பேர் வந்துள்ளனர். இதேவேளை கப்பலில் அழைத்துவரப்பட்ட நோயாளர்கள் காயப்பட்டவர்களில் ஒரு தொகுதியினர் 10அம்புலன்ஸ்களில் பதவியா வைத்தியசாலைக்கு உடனடியாக நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இக்கப்பலில் அழைத்துவரப்பட்டவர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் நோயாளர்கள் தவிர்ந்த ஏனையோர் சம்பத்புவர இடைத்தங்கள் முகாமுக்கு இரவு பத்து மணிக்கு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

9 thoughts on “முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கிறீன் ஓசன் கப்பலின் மூலம் ஐ.சி.ஆர்.சியின் வழித்துணையுடன் நேற்று 516பேர் புல்மோட்டைக்கு வருகை

 1. துண்டு அளவு நிலத்தில் அப்பாவி மக்களை அடைத்து அதன் நடுவில் தலைவரை விட்டு நம்பியிருந்த மக்களைக் காப்பாற்ற வக்கில்லாமல் இறந்த மக்களை ஒழுங்காக கணக்கெடுத்து அந்தக் கணக்கை காட்டி புலன்பெயர்ந்த தமிழர்களையும் புலம்பெயர்ந்த தமிழ் தெரியாத தமிழர்களையும் கொண்டு உலகநாடுகளின் தலைநகரமெல்லாம் ஒப்பாரிவைக்க வைக்கிறீர்களே!
  இப்பொழுதாவது உண்மையை ஒத்துக்கொண்டு உங்கள் கைகளை தூக்கிக்கொண்டு பெரிசுகளெல்லாம் வெளியே வந்தால் எஞ்சியிருக்கிற குழந்தைப் போரளிகளும் அப்பாவி மக்களும் தப்புவார்கள் அல்லவா?

 2. It will not make difference to people because if they come &surrender the governement also does the same thing by imprisionating them ,sexually abusing.These reports and claims were made by channel 4which is a independent media.why dont you all brodcast that video as well.Give neutral view for our peoples problem.I know the forces personally as well.They are not saints.but you all are scared to admit it .I studied in the school where most chiefs in forces come from.Because you all only publish news which talks about LTTE wrong doing,I like to know the details.The same way talk about Government&their forces.Show details regarding what Douglas did it past?and other tamilmovements. Bring the truth.Please just dont be propaganda machine for government.

 3. Thanks Theo…
  you said, you studied in the school, where chiefs come from. But, you didnt mentioned the school name. It’s ok. I think, you are talking about the LTTE chiefs in command.
  Another question to you. The LTTE leader or the others in the LTTE are un educated. How can you say that they all studied in your school?
  The NO FIRE ZONE for the innocent people. Not for the ARMY or the LTTE. If the LTTE’s are brave, they can fight face to face with the ARMY.

 4. Ottakuthan I studied at RoyalCollege.See you made the decision by yourself iam anLTTE .Its so sad that you are unable to read &understand the comment.I never supported LTTE in my life time.See in modern world there is no bravery exists.By killing innocent people America also claimed they were brave same thing happening in Sl.Sl army had assistance from China &India.Still I have friend in Military who have been to China for the training 1 and half years ago.If you are talking about SL leaders most of them were uneducated as well.It range from Mr Premadasa to Mrs Chandrika.Education helps people to be better human being.Premadasa was one of the great president Sl had he was uneducated.So please have the facts before you talk.You get so mad because I wrote whats really happening.You might one way or another getting finacial assistance from Government or linked with tamil movement.I presume you are not a Tamil.Because you can speak/write tamil it does not make you poet(ottakuthan)Like i said this web site is not publishing any video broadcast against the goverment from that its easy to make conclusion its not neutral web site.

 5. mr.theo,dont waste your time with these low life scammers,these guys got paid by government and doing things like that,people like him will go to hell,dont bother putting comments here,if these low life scam born for one father he wouldent be here,

 6. ராணுவ உயர் அதிகாரிகள் படித்த ராயல் காலேஜ் இல தமிழரான இவர் படித்ததெண்டால் சம உரிமை தானே? சிங்களவன் அடக்குமுறை எங்கே?

  புலிகளுக்கு எதிரா எழுதினா, அரசாங்கம் காசு கொடுக்குதாம்… அப்ப இவங்களுக்கு புலிகள் கொடுக்கினமோ?
  எப்பவும் காசு வேண்டியே செய்து பழக்கப்பட்ட இவர்களுக்கு அது தான் தெரியும்…

  ஐயாமாரே…. சிங்களவன் தமிழரை கொல்லுறான் . உண்மை…. ஆனால் அதன் பின்னணி என்ன?
  கொழும்பில், கிழக்கில் , யாழில் கொல்கிறானா? யோசியுங்கோ….
  புலிகள் என்ன செயினம்? செத்த மக்களின் படங்களும் எண்ணிக்கையும் தானே இப்ப அவர்கள் எடுகினம்…. அப்ப ராணுவத்தோட மோத முடியாதா?

 7. iya noikeera,what are you saying, uta amma vanniyila iruntha ippadi kathapiye,nee v—– pirantha p….. thane,

 8. ஐய ஷான்… கருத்துக்களோடு மோதும் ஐயா… அதை விட்டு விட்டு… மற்றவர் பிறப்பை ஆராய வேண்டாம்…..

  கவனம், வன்னியில் இருக்கும் உமது — உங்கள் தேசிய தலைவர் மூலம் உமக்கு ஒரு தம்பியை கொண்டு வந்தாலும் வருவா…..ஹிஹி

  மற்றவர் மன்னிக்கவும் என்னை.. இவ்வளவு கீழ் தரமா எழுதுவதுக்கு,.,,,
  ஐயா ஷான் ..எங்களுக்கும் தெரியும் தூசனம் எல்லாம்…. ஆங்கிலத்திலும் தூசனம் தெரியும்… கெட்ட வார்த்தை களும் தெரியும்…..
  ஐயா..அதை விடுத்து… கருத்துக்களால் மோதுவோம்…..

 9. ஐயா நக்கீரரே!
  இவர்கள் பாவப்பட்ட ஜென்மங்கள் ஐயா, மன்னித்துக்கொள்ளுங்கள்.
  தமிழீழம் எனும் பட்டு வேட்டியைக் களவுகொடுத்துவிட்டு, இப்போது தலைவர் எனும் கோவணத்தையும் எப்போது உருவுவார்கள் எனும் பயத்தில் என்ன பேசுவதென்று தெரியாமல் ஏதேதோ உறுமுவதாக நினைத்து வாய் உளறுகிறார்கள்.
  பிழைத்துப் போகட்டும்!
  பிரபாகூட்டத்திற்குப் போடும் வாய்க்கரிசி கொஞ்சம் மிஞ்சட்டும்!

Leave a Reply

Previous post ஜப்பானில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பணமோசடி
Next post wanni meheuma -sri lanka war situation full video.