பிரபாகரனின் உடல் கிடைத்தது-வீடியோ வெளியீடு

Read Time:3 Minute, 12 Second

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் இன்று காலை கிடைத்ததாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் கிடக்கும் வீடியோவையும் ராணுவம் வெளியிட்டுள்ளது. அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் கிடக்கும் வீடியோக்களையும் ராணுவம் வெளியிட்டுள்ளது. நந்திக்குளம் என்ற இடத்தில் அவரது உடல் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நயனகாரா கூறியுள்ளார். தனது இயக்க உடையில் உள்ள பிரபாகனின், தலையில் குண்டு பாய்ந்து சிதைந்துள்ளது போல காட்சியளிக்கிறது. ஆனால், அதை மறைக்க தலையில் ராணுவத்தினர் ஒரு ஊதா நிற துணையை வைத்து மறைத்துள்ளனர். நந்திக்குளம் என்ற ஒரு சிறிய தீவுத் திட்டில் நீர் நிறைந்த புல் வெளியில் அவரது உடல் கிடந்ததாகவும் ராணுவம் கூறியுள்ளது. உடலை ஸ்ட்ரெச்சரில் வைத்து எடுக்கப்பட்ட அந்த வீடியோக்களை இலங்கை அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இது குறித்து இந்தியத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நயனகாரா, நேற்றே பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாகவும் இன்று தான் உடல் மீட்கப்பட்டதாகவும் கூறினார். நேற்று பிரபாகரன் ஒரு வேனில் தப்ப முயன்றபோது இடைமறித்து தாக்குதல் நடத்திக் கொன்றதாகவும், ராக்கெட்டை ஏவியதில் அவரது உடல் எரிந்து போனதாகவும் கூறப்பட்டது. ஆனால், இன்று வெளியிடப்பட்ட வீடியோவில் அவரது உடல் எரிந்து போனதற்கான காயங்கள் ஏதுமில்லை. மேலும் டிஎன்ஏ சோதனைக்காக உடல் நேற்றே ஹெலிகாப்டரில் கொழும்பு கொண்டு செல்லப்பட்டதாக ராணுவம் கூறியிருந்தது. ஆனால், இன்று தான் அவரது உடலை ஒரு புல்வெளியில் மீட்டதாகக் கூறி வீடியோவை காட்டுகிறது. இந்த முரண்பாடுகள் குறித்து நயணகாராவிடம் கேட்டதற்கு, வேனில் தப்பியபோது பிரபாகரனை தாக்கினோம் என்று நாங்கள் சொல்லவில்லை. அவரது உடலை நேற்றே கொழும்பு கொண்டு சென்றதாகவும் நாங்கள் கூறவில்லை. அப்படி ஒரு தவறான செய்தியை சில மீடியாக்கள் தான் வெளியிட்டன. அவர் நேற்று கொல்லப்பட்டா, உடல் இன்று தான் மீட்கப்பட்டது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

8 thoughts on “பிரபாகரனின் உடல் கிடைத்தது-வீடியோ வெளியீடு

 1. vakkol pompaiyai vaiththukoddu singalavana eamaattalam,tamil makkalai alla.moaddu singalavankal enru theriyuthu ithil irunthu.

 2. உயிருடன் நடிகர்கள் பல வேடங்களில் நடித்துப்

  பார்த்திருக்கிறேன்! ஆனால் பிரபாகரனின் பிணம்

  என்று சிங்கள ராணுவத்தால் உலகை ஏமாற்ற

  காட்டப்பட்ட ..பிணம் பல வேடங்களில் நடித்ததை

  சிங்கள இணையத் தளத்திலும் ஒட்டுக் குழுக்களின்

  இணையத் தளங்களிலும் கண்டேன். உண்மை மிக

  விரைவில்…………..

 3. please visit to
  http://www.defence.lk
  http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8056752.stm
  http://www.bbc.co.uk/tamil/
  http://www.alertnet.org/thenews/newsdesk/SP75193.htm
  http://www.alertnet.org/thenews/newsdesk/COL326349.htm

  இதெல்லாம், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத் தளங்கள்.

  அதையும் விடுங்கோ..நீங்கள் நீங்கள் இருக்கிற நாட்டில வெளிவ்ருகிற இண்டைய, நாளைய, செய்தித் தாளுகளைப் படியுங்கோ…

  எல்லாம் பொய்…

  தனிய, , புதினம், சங்கதி, தமிழ்நெற்……மட்டும் உண்மை…..

  திருப்தியோ?

 4. நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்…அது மட்டும் மெய்……திருப்தியோ?

 5. பின்லேடனை கூட அமெரிக்கா எப்போதோ கொன்று

  விட்டது. அப்படியானால் சிறீலங்கா அவர்களுக்கு

  சளைத்தவர்௧ளா? என்னங்க………

 6. உங்களுக்கு எதுவுமே அடங்காது!
  1987ல் இந்தியா தர இருந்த மாநில சுயாட்சி… உங்களுக்கு காணாது!
  2000ல் பேச்சுவார்த்தையில் பேசத்தெரியாமல், ஏ9 வீதியில் தமிழீழம் கண்டவர்கள்தானே!
  இலங்கை இராணுவமே யுத்தத்தை முடித்துவிட்டது… இவர்கள் என்னடான்னா…
  பேத்தையன் பிரபா இன்னும் உயிரோடு இருக்கிறானாம்…
  சின்னப்பிள்ளைத் தனமாக் கிடக்கு!

 7. கடந்த 30 வருட காலமாக கட்டி வளர்த்து ஆகாயப்படை, தரைப்படை, கடற்படை அனைத்தையும் உருவாக்கி எதையும் சாதிக்க முடியாமல் மக்களையும் அழித்து தாங்களும் அழிந்து மீண்டும் ஈழத்தை பிடித்து தரப்போகிறார்கள் என்பதை மக்கள் நம்புகிறார்கள் என்றால் அவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

Leave a Reply

Previous post ராஜபக்சேவுடன் பிரணாப் அவசர ஆலோசனை
Next post The Dead Body of Velupillai Piribhaharan – Sri Lankan Tamil News