வடக்கு, கிழக்கில் 265,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.

Read Time:2 Minute, 20 Second

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நடந்த மோதல்கள் காரணமாக இதுவரை 265,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் சரியான நிவாரணங்கள் மற்றும் சரியான கட்டுமானங்களின்றிப் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக யூ.என்.எச்.சீ.ஆர். பேச்சாளர் ரொன் ரெட்மொன்ட் கூறினார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சிறியதொரு பகுதியும் மீPட்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். பெரும் எண்ணிக்கையானவர்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதால் முகாம்களில் இடப்பற்றாக்குறை காணப்படுவதுடன், மக்கள் மத்தியில் நெருக்கடி நிலையொன்று காணப்படுகிறது என்றார் ரெட்மொன்ட். மோதல்கள் நடைபெற்ற பகுதிகளுக்கு மாத்திரமன்றி, இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குச் செல்லக்கூட கடந் சில நாட்களாக அனுமதிக்கப்படவில்லையென யூ.என்.எச்.சீ.ஆர். தெரிவித்துள்ளது. பாதுகாப்பு வலயப் பகுதிக்கு கடந்த 9ஆம் திகதியிலிருந்து செல்லமுடியவில்லையென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்; அறிவித்துள்ளது. இதனால் அந்தப் பகுதியிலிருந்த மக்களுக்கான நிவாரணப் பொருள்களை வழங்கமுடியாமல்போனதாகவும் செஞ்சிலுவைச் சங்கமும்;, ஐக்கிய நாடுகள் சபையும் அறிவித்திருந்தன. “இடம்பெயர்ந்த மக்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில், பட்டினியுடன் பலவீனமானமுறையில் வருகின்றனர்” என்றார் ரெட்மொன்ட்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொட்டம்மான், நடேசன் மற்றும் பானு ஆகியோரின் மனைவிமார்களும் கொல்லப் பட்டுள்ளதை இராணுவம் உறுதி செய்தது..!
Next post பிரபாகரனின் உடலுக்கு தேவைப்படும் பட்சத்தில் மரபணு பரிசோதனையும் நடத்தப்படும்.. சரணடைந்துள்ள புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலே முடிவு எடுக்கும் -அமைச்சர் ரம்புக்வெல