புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கப்பம் வாங்கிய கும்பல் கைது

Read Time:3 Minute, 0 Second

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கொழும்பிலும் புறநகரங்களிலும் உள்ள வர்த்தகர்களிடம் லட்சக்கணக்காண பணத்தை கப்பமாக பெற்று வந்ததாக கூறப்படும் கப்பம் வாங்கும் கோஷ்டியின் தலைவர் ஒருவர் உட்பட மூன்றுபேரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து கப்பமாக பெறப்பட்டதாக கூறப்படும் மூன்றரை லட்சம் ரூபா பணமும் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இக்கோஷ்டிக்கு தலைமை தாங்கியவர் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்ட கான்ஸ்டபிள் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது. தற்போது கொழும்பு நகர பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இக்கப்பம் வாங்கும் கோஷ்டியுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்படுகையில் கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் இக்கோஷ்டியினர் 60ஆயிரம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளனர் குறித்த வர்த்தகரிடம் எற்கனவே இரண்டு தடவைகள் ஐந்துலட்சம் ரூபாவையும் இரண்டு லட்சம் ரூபாவையும் கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள தேவஸ்தானத்திற்கு அருகில் உள்ள பஸ்தரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரும்படி கூறியுள்ளனர்.. சம்பந்தப்பட்ட வர்த்தகர் தம்மிடம் கப்பம் கோரப்பட்ட விடயத்தை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் வாஸ் குணவர்தனாவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். அவரின் அறிவுறுத்தலுக்கு இணங்க வர்த்தகர் பணத்துடன் தேவஸ்தானத்திற்கு அருகில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளார். கப்பம் பெறும் கோஷ்டியை சேர்ந்த ஒருவர் பணத்தை வர்த்தகரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வந்தபோது அங்கு மாறுவேடத்தில் நின்ற குற்றத்தடுப்பு பொலிஸார் மடக்கிப் பிடித்தனர் இவரிடம் நடத்திய விசாரணைகளையடுத்து கந்தானையிலும் குருநாகலிலும் வைத்து ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அகதி முகாமில் பிரபாகரனின் பெற்றோர்-ராஜபக்சே
Next post புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர்களின் அனைத்து விபரங்களும் கிடைத்துள்ளதாக இலங்கை படைத்தரப்பு அறிவிப்பு