சரணடைந்த பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர்!!! (படங்கள் இணைப்பு –கவனம்.. கோரமானவை!!!)

Read Time:8 Minute, 11 Second

ltte-tc-prabaharan_05பெரும்பான்மையான தமிழ் மக்கள் தம் தலைவனாக நம்பிய ஒருவனின் உடலை அவமானப்படுத்துவது கூட, தமிழ் இனத்தையே அவமானப்படுத்துவது தான். இந்த நிலையில் அவனைக் கொன்று குதறிய விதம், தமிழினத்தின் மேலான ஒரு குற்றமாகும். புலிகள் மேலான எந்த குற்றச்சாட்டையும், ஒரு நாட்டின் சட்டத்தின் எல்லைக்குள் விசாரணை செய்யமுடியும்;. இதன் மூலம் தண்டிக்கவும் முடியும். இதற்கு சட்டங்கள் வைத்திருக்கின்றவர்கள் தான், சட்டவிரோதமாக தம் பாசிச வழியில், சரணடைந்த பிரபாரகரனை காட்டுமிராண்டித்தனமாக கொன்றனர். அவனின் உடலைக் கூட பலவிதமான இழிவுக்குள்ளாக்கி அவமானப்படுத்தினர். இவை எல்லாம் போர்க்குற்றங்கள் தான். இறந்த உடலை அவமானப்படுத்துவது கூட குற்றம் தான். யுத்தத்தில் இறந்த உடலை அவமானப்படுத்து, போர்க்குற்றம்.

அதுவும் இனத்துக்காக போராடிய தலைவன் ஒருவனை இப்படிச் செய்வது, இனவிரோதக் குற்றமாகும். இதை சர்வதேச சட்டங்கள் கூட வரையறுக்கின்றது. ஆனால் பேரினவாத பாசிச பயங்கரவாதமோ, இதை உலகறிய காட்சிப்படுத்துகின்றது. இதற்குள் சிங்களப் பேரினவாதம் தம் போர்க்குற்றங்களை உலகறியக் கூடாது என்பதற்காக, பிரபாகரன் எப்படி சாகடிக்கப்பட்டான் என்பதை மறைக்க தலைக்கு துணி போட்டனர். எப்படிப்பட்ட மரணம் என்பதை, குற்றத்தின் முழுத் தன்மையை எடுத்துக் காட்டும் வண்ணம் படத்தை இணைத்துள்ளோம். எப்படி பிரபாகரன் கொல்லப்பட்டான் என்பதை, இது எடுத்துக் காட்டுகின்றது.

அவர் மோதலில் சாகவில்லை என்பதையும், மூன்றாம் தரப்பிடம் சரணடைந்த பிரபாகரனை, மூன்றாம் தரப்பின் துணையுடன் எப்படி பேரினவாத பாசிட்டுகள் உயிருடன் சிதைத்தனர் என்பதை இந்தப் படம் எடுத்துக் காட்டுகின்றது. இங்கு இணைக்கப்பட்டுள்ள மற்றைய படங்கள், அரச பேரினவாதிகள் இறந்த உடலை அவமானப்படுத்தும் வக்கிரத்தை எடுத்துக் காட்டுகின்றது.

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம். இதே அவமானத்தைத்தான் பிரபாகரன் உடல் சந்திக்கின்றது. இறந்த உடலுக்கு கோமணம் கட்டி மகிழ்கின்ற பேரினவாத அதிகார வர்க்கம், தமிழனுக்கு கோமணம் கட்டிய வக்கிரத்துடன் அனைத்தும் நடந்தேறியுள்ளது.

பிரபாகரன் உடல் பலவிதமாக சிதைக்கப்படுகின்றது. முதலில் அரசு காட்டிய படம், அடித்து வீங்கிச் சிதைந்து போன முகம் தான். இறந்த பெண்ணின் உடலை மேய்ந்த அதே வக்கிரம் தான் இங்கும். பிரபாகரன் உடல் மேல் வன்முறைகள், எதிர்காலத்தில் காட்சிகளாக கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இங்கு குற்றங்கள் பல. பிரபாகரனின் வெறும் உடலுக்கு அப்பால், மூன்றாம் தரப்பிடம் நம்பி சரணடைந்த ஒருவனுக்கு நடந்த கதையிது. அவனை சித்திரவதை செய்து கொன்ற உண்மையை, இங்கு பளிச்சென்று இந்தப் படம் எடுத்துக் காட்டுகின்றது. போர்க் குற்றத்தின் முழுப் பரிமாணத்துடன், இது அரங்கேறியுள்ளது.

வெளிநாட்டு புலித்தலைமை தன் குற்றத்தை மறைக்க வீரமரணம் என்று ஒருபுறம் சொல்லியும், இல்லை உயிருடன் உள்ளார் என்று ஏனையோர் சொல்லியும், தன் தலைவன் மேலான இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக உள்ளனர். பிரபாகரனை சரணடைய வைக்க தாம் மூன்றாம் தரப்பு ஊடாக நடத்திய காட்டிக் கொடுப்பை மூடிமறைக்க இந்தப் போர்க்குற்றமே இவர்களால் மூடிமறைக்கப்படுகின்றது.

இந்த உடல் பிரபாகரனுடையதல்ல என்றதன் மூலம், பேரினவாதம் செய்த இழிவையும் இந்த படுகொலையையும் கூட மறுக்கின்றனர். உண்மையில் பிரபாகரனை மூன்றாம் தரப்பிடம் சரணடைய வைத்து, அதன் மூலம் தாங்கள் காட்டிக்கொடுத்த இந்தச் சதியை மூடிமறைக்கின்றனர்.

இதன் மூலம் தமிழன் தலைவனாக தமிழ்மக்களால் கருதப்பட்ட ஒருவன் மேல் நிகழ்ந்த போர்க்குற்றத்தின் தன்மையையே, இவர்கள் இல்லாததாக்குகின்றனர். இப்படி பேரினவாத அரசுக்கு அவர்கள் மேலும் துணை போகின்றனர். அரசின் குற்றத்துக்கு பின்னால், அதற்கு உடந்தையாகி நிற்கின்றனர்.

 

பெரும்பான்மைத் தமிழ்மக்களை அவமானப்படுத்திய பேரினவாத அசிங்கத்தை வெளிப்படுத்தாது, தம் குற்றத்தை மூடிமறைக்க காட்டிக் கொடுக்கப்படுகின்றது.

மறுபக்கத்தில் துரோகக் குழுக்கள், இந்த போர்க்குற்றத்தின் பின் இருந்துள்ளனர். பிரபாகரனை மோசடி மூலம் மூன்றாம் தரப்பிடம் சரணடைய வைத்துக் கொன்றவர்கள் தான், படத்தை பெருமையுடன் வெளியிட்டார்கள். வேறு யாருமல்ல இந்தியாவில் றோவின் கூலிப்படையாக இருக்கும் ஈ.என்.டி.எல்.எவ் இணையம் இந்தப் படத்தை வெளியிட்டவுடனேயே, சிறிது நேரத்தில் அதை அகற்றியிருந்தனர். குற்றவாளிகள் தம் குற்றத்தை முழுமையாக மறைக்க எடுத்த எச்சரிக்கை நடவடிக்கை, இந்தப் படத்தை அவர்களை உடனேயும் அகற்ற வைத்துள்ளது. இப்படி இந்த போர்க் குற்றத்தில் இந்திய, இலங்கை கூலிக்குழுக்களும் இணைந்தே பங்காற்றியுள்ளது. அரசுடன் இயங்கும் கருணா முன்னிலையில், மூன்றுவிதமான உடல் சார் காட்சிகளை நாம் காணமுடியும்.

இப்படி போர்க்குற்றத்தின் முழுப் பரிமாணத்தில், அனைத்து பாசிட்டுகளும் ஈடுபட்டுள்ளனர். புலம்பெயர் புலியெதிர்ப்பு ஜனநாயகவாதிகளின் துணையுடனேயே இந்தக் குற்றம் இன்று பாதுகாக்கப்படுகின்றது. இறந்த உடல் மேல் நடத்திய இழிவு, சரணடைந்த அவரைக் கொன்ற விதம், இந்த “ஜனநாயகத்துக்கு” ஏற்புடையதாக உள்ளது. இதுதான் அவர்கள் பேசும் ஜனநாயகம். இதுபோன்ற செயலை புலிகள் செய்தாலும் சரி, அரசு செய்;தாலும் சரி, அனைத்தும் மக்களுக்கு எதிரானவை தான்.

அந்தவகையில் நாம் மக்களுக்காக போராட வேண்டியுள்ளது. அனைத்து மக்கள் விரோதிகளையும், நாம் இனம் காணவேண்டிய காலமிது.

–பி.இரயாகரன் (நன்றி.. தமிழ்சேர்கில் இணையம்.. -சில தணிக்கைகளுடன்-)

lttepiraba-dead001mm1ltteprabahranbody-001ltteprabahranbody-002ltte-tc-prabaharan_02ltte-tc-prabaharan_03ltte-tc-prabaharan_04ltte-tc-prabaharan_06ltte-tc-prabaharan_05ltte-tc-prabaharan_07ltte-tc-prabaharan_08ltte-tc-prabaharan_09ltte-tc-prabaharan_10ltte-tc-prabaharan_11lttepiraba-deadbody

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

102 thoughts on “சரணடைந்த பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர்!!! (படங்கள் இணைப்பு –கவனம்.. கோரமானவை!!!)

 1. தமிழீழத்துக்காக விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டுவந்த 33 ஆண்டு கால போராட்டத்துக்கு கசப்பான முடிவு ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோனி உள்பட முக்கியத் தலைவர்கள் பலரும் ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்திருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு முன்வந்து போர்நிறுத்தம் செய்வதாகப் புலிகள் அறிவித்த பின்னரும் இலங்கை அரசு போரை நிறுத்த முன்வரவில்லை. இந்தப் போரை நிறுத்த இந்திய அரசும் எந்த முயற்சியும் செய்யவில்லை. இந்திய அரசின் மெத்தனத்துக்கும் நாடகத்துக்கும் தமிழக அரசும் ஒத்திசை நிகழ்த்தியது. திட்டமிட்டு நடந்தேறிய நாடகம் தேர்தலுக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட வேண்டும் என்பதுதான் அதிபர் ராஜபட்சவைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலர் விடுத்த கோரிக்கையாக இருந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.  இரு தினங்களுக்கு முன்பே, “துப்பாக்கிகளை மெüனத்தில் ஆழ்த்துகிறோம்’ என்ற புலிகளின் அறிவிப்பே, அவர்கள் ஒட்டுமொத்தமாக சயனைடு அருந்தி தற்கொலை செய்யவுள்ளனர் என்பதை உணர்வுள்ள எந்தத் தமிழனாலும் உணர முடியும். பிரபாகரன் ஒரு ஆம்புலன்ஸ் வேனில் தப்பிச் செல்ல முயன்றபோது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுவது பிரபாகரனை களங்கப்படுத்தும் நோக்கமே தவிர வேறில்லை.
   
   
    வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பொருத்தவரை இறுதிவரையிலும் அவர் ஒரு தமிழ்ப் போராளி மட்டுமே. ராஜீவ் காந்தி மனிதகுண்டால் கொலையுண்ட பின்னர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாகவும் கொலைக் குற்றவாளியாகவும் பார்க்கும் நிலைமை ஏற்பட்டது. இலங்கையில் தமிழ் அடையாளத்தையும் அங்கே தம் சொந்த மண்ணை, தொழிலை, மனித உறவுகளை இழந்து நின்ற மக்களும் பிரபாகரனும் மட்டுமே இதற்கு நியாயத் தீர்ப்பு சொல்ல முடியும். மனத்துயரும் வலியும் அறியாதவர்களால் ஒரு எதிர்வினையை முழுமையாகப் பார்க்க இயலாது. பிரபாகரன் மீது தீர்ப்பு சொல்லத் தகுதியுள்ளவர்கள் அந்த மண்ணில் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே.சேகுவேரா உள்ளிட்ட பல போராளிகளும் தங்கள் விடுதலை வேள்விக்கான காரணங்களை, அரசியலைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஹிட்லர் கூட தனது நியாயத்தை தன்வரலாறாகப் பதிவு செய்திருக்கிறார். பிரபாகரன் இதுவரை எத்தகைய பதிவுகளையும் செய்திருக்கவில்லை. அது ஏன் என்பது மிகப்பெரிய புதிர். அந்தப் புதிருக்குக் காரணம் தெரியாதவரை பிரபாகரனை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. தன்னைப் போன்றே போராடிய பிற சகோதர அமைப்புகள் அழிக்கப்பட்டது வேறு எந்த நாட்டு விடுதலைப் போரிலும் பார்க்க இயலாதவொன்று. பிரபாகரன் அதனைத் தனது நியாயங்களுக்காக இலங்கையில் நிகழ்த்தியதன் விளைவு, தற்போது புலிகளுக்குப் பின் தமிழர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை என்ற வெறுமை ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை, விடுதலைப் புலிகள் அரசியல் பாதைக்குத் திரும்பியிருந்தால் இந்த வெறுமை முழுமையாக இட்டு நிரப்பப்பட்டு இருக்கலாம். தனது பலம் வாய்ந்த கொரில்லா போர்முறையை கைவிட்டு, ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரிடும் வழக்கமான போர்முறைக்கு மாறியதுதான் விடுதலைப் புலிகளின் பலவீனம் என்றும், கேப்டன் கருணாவின் ஆலோசனைகளும், இந்திய அரசின் ஆயுத உதவிகளுமே இந்த இயக்கத்திற்கு முடிவை ஏற்படுத்தின என்பதும் பொதுவான கணிப்பு. இருப்பினும், இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் செய்த துரோகம் துளைத்த அளவுக்கு விடுதலைப் புலிகளின் மார்பை எந்தத் தோட்டாக்களும் துளைத்திருக்கவில்லை. இலங்கைத் தமிழர் மீதான ஒடுக்குமுறைதான் புலிகள் அமைப்பு பிறக்கக் காரணமாக இருந்தது. இன்று புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு சொல்லலாம். ஆனால் இலங்கைத் தமிழரின் நியாயமான கோரிக்கை நிறைவேறாதவரை, அங்கே ஒவ்வொரு பெண்ணின் வயிற்றிலும் ஒரு புலி பிறந்துகொண்டேதான் இருக்கும்.  விடுதலைப் புலிகளும் களத்தில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், ஈழத் தமிழர் பிரச்னைக்கு இலங்கை அரசு இனி அரசியல் தீர்வு ஏற்படுத்தும் என்றும், நிரந்தர அதிகாரப் பகிர்ந்தளிப்புக்கு சம்மதிக்கும் என்றும் நினைப்பது கனவாகத்தான் இருக்கும். இந்தப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணாதவரை ஈழத் தமிழர் எழுச்சியும், தீவிரவாத உணர்வும் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருக்குமே தவிர அடங்கிவிடும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.  இலங்கைப் பிரச்னை தேர்தலைப் பாதிக்காது என்று சொன்னவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். மீண்டும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கலாம். ஆனாலும் மத்திய அரசில் அமைச்சராக உறுதிமொழியேற்றிடும் ஒவ்வொரு தமிழக அமைச்சரின் கையொப்பத்திலும் இலங்கைத் தமிழரின் கரிய ரத்தம் கசிந்திருக்கும். மையின் ஒவ்வொரு துளியிலும் இலங்கைத் தமிழரின் முகம் இருக்கும். எத்தகைய கண்ணீரும், நிவாரண உதவிகளும், வழக்கமான மணிமண்டபங்களும், மலர்அஞ்சலிகளும், தடை நீக்கங்களும், அதனை மாற்றிவிடாது.

 2. தமிழீழத்துக்காக விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டுவந்த 33 ஆண்டு கால போராட்டத்துக்கு கசப்பான முடிவு ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோனி உள்பட முக்கியத் தலைவர்கள் பலரும் ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்திருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு முன்வந்து போர்நிறுத்தம் செய்வதாகப் புலிகள் அறிவித்த பின்னரும் இலங்கை அரசு போரை நிறுத்த முன்வரவில்லை. இந்தப் போரை நிறுத்த இந்திய அரசும் எந்த முயற்சியும் செய்யவில்லை. இந்திய அரசின் மெத்தனத்துக்கும் நாடகத்துக்கும் தமிழக அரசும் ஒத்திசை நிகழ்த்தியது. திட்டமிட்டு நடந்தேறிய நாடகம் தேர்தலுக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட வேண்டும் என்பதுதான் அதிபர் ராஜபட்சவைச் சந்தித்த இந்திய வெளியுறவுச் செயலர் விடுத்த கோரிக்கையாக இருந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.  இரு தினங்களுக்கு முன்பே, “துப்பாக்கிகளை மெüனத்தில் ஆழ்த்துகிறோம்’ என்ற புலிகளின் அறிவிப்பே, அவர்கள் ஒட்டுமொத்தமாக சயனைடு அருந்தி தற்கொலை செய்யவுள்ளனர் என்பதை உணர்வுள்ள எந்தத் தமிழனாலும் உணர முடியும். பிரபாகரன் ஒரு ஆம்புலன்ஸ் வேனில் தப்பிச் செல்ல முயன்றபோது நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் கூறுவது பிரபாகரனை களங்கப்படுத்தும் நோக்கமே தவிர வேறில்லை.வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பொருத்தவரை இறுதிவரையிலும் அவர் ஒரு தமிழ்ப் போராளி மட்டுமே. ராஜீவ் காந்தி மனிதகுண்டால் கொலையுண்ட பின்னர் பிரபாகரனை ஒரு தீவிரவாதியாகவும் கொலைக் குற்றவாளியாகவும் பார்க்கும் நிலைமை ஏற்பட்டது. இலங்கையில் தமிழ் அடையாளத்தையும் அங்கே தம் சொந்த மண்ணை, தொழிலை, மனித உறவுகளை இழந்து நின்ற மக்களும் பிரபாகரனும் மட்டுமே இதற்கு நியாயத் தீர்ப்பு சொல்ல முடியும். மனத்துயரும் வலியும் அறியாதவர்களால் ஒரு எதிர்வினையை முழுமையாகப் பார்க்க இயலாது. பிரபாகரன் மீது தீர்ப்பு சொல்லத் தகுதியுள்ளவர்கள் அந்த மண்ணில் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமே.
    சேகுவேரா உள்ளிட்ட பல போராளிகளும் தங்கள் விடுதலை வேள்விக்கான காரணங்களை, அரசியலைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஹிட்லர் கூட தனது நியாயத்தை தன்வரலாறாகப் பதிவு செய்திருக்கிறார். பிரபாகரன் இதுவரை எத்தகைய பதிவுகளையும் செய்திருக்கவில்லை. அது ஏன் என்பது மிகப்பெரிய புதிர். அந்தப் புதிருக்குக் காரணம் தெரியாதவரை பிரபாகரனை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.
   தன்னைப் போன்றே போராடிய பிற சகோதர அமைப்புகள் அழிக்கப்பட்டது வேறு எந்த நாட்டு விடுதலைப் போரிலும் பார்க்க இயலாதவொன்று. பிரபாகரன் அதனைத் தனது நியாயங்களுக்காக இலங்கையில் நிகழ்த்தியதன் விளைவு, தற்போது புலிகளுக்குப் பின் தமிழர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை என்ற வெறுமை ஏற்பட்டு இருக்கிறது. ஒருவேளை, விடுதலைப் புலிகள் அரசியல் பாதைக்குத் திரும்பியிருந்தால் இந்த வெறுமை முழுமையாக இட்டு நிரப்பப்பட்டு இருக்கலாம். தனது பலம் வாய்ந்த கொரில்லா போர்முறையை கைவிட்டு, ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் போரிடும் வழக்கமான போர்முறைக்கு மாறியதுதான் விடுதலைப் புலிகளின் பலவீனம் என்றும், கேப்டன் கருணாவின் ஆலோசனைகளும், இந்திய அரசின் ஆயுத உதவிகளுமே இந்த இயக்கத்திற்கு முடிவை ஏற்படுத்தின என்பதும் பொதுவான கணிப்பு. இருப்பினும், இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் செய்த துரோகம் துளைத்த அளவுக்கு விடுதலைப் புலிகளின் மார்பை எந்தத் தோட்டாக்களும் துளைத்திருக்கவில்லை. இலங்கைத் தமிழர் மீதான ஒடுக்குமுறைதான் புலிகள் அமைப்பு பிறக்கக் காரணமாக இருந்தது. இன்று புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு சொல்லலாம். ஆனால் இலங்கைத் தமிழரின் நியாயமான கோரிக்கை நிறைவேறாதவரை, அங்கே ஒவ்வொரு பெண்ணின் வயிற்றிலும் ஒரு புலி பிறந்துகொண்டேதான் இருக்கும்.  விடுதலைப் புலிகளும் களத்தில் இருந்து அகற்றப்பட்ட நிலையில், ஈழத் தமிழர் பிரச்னைக்கு இலங்கை அரசு இனி அரசியல் தீர்வு ஏற்படுத்தும் என்றும், நிரந்தர அதிகாரப் பகிர்ந்தளிப்புக்கு சம்மதிக்கும் என்றும் நினைப்பது கனவாகத்தான் இருக்கும். இந்தப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணாதவரை ஈழத் தமிழர் எழுச்சியும், தீவிரவாத உணர்வும் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருக்குமே தவிர அடங்கிவிடும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.  இலங்கைப் பிரச்னை தேர்தலைப் பாதிக்காது என்று சொன்னவர்கள் வெற்றி பெற்றிருக்கலாம். மீண்டும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கலாம். ஆனாலும் மத்திய அரசில் அமைச்சராக உறுதிமொழியேற்றிடும் ஒவ்வொரு தமிழக அமைச்சரின் கையொப்பத்திலும் இலங்கைத் தமிழரின் கரிய ரத்தம் கசிந்திருக்கும். மையின் ஒவ்வொரு துளியிலும் இலங்கைத் தமிழரின் முகம் இருக்கும். எத்தகைய கண்ணீரும், நிவாரண உதவிகளும், வழக்கமான மணிமண்டபங்களும், மலர்அஞ்சலிகளும், தடை நீக்கங்களும், அதனை மாற்றிவிடாது.

Leave a Reply

Previous post யாழ் மாநகரசபைத் தேர்தலில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி
Next post அவ்வப்போது கிளாமர் படங்கள்..