விமான தாக்குதலில் 16பேர் பலி ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!
இராணுவத் தளபதி மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலை தொடர்ந்து வன்னிபுலிகளின் இலக்குகள் மீது தாக்குதல். சம்ப+ர், இறால்குழி, ஈச்சிலம்பத்தை, பகுதிகள் உட்பட்ட வன்னிபுலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொண்ட விமான தாக்குதல்கள், எறிகணை தாக்குதல்களால் 16பேர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக வன்னிபுலிகள் குற்றச்சாட்டு. இதேவேளை வன்னிபுலிகள் மேற்கொண்ட எறிகணையொன்று மூதூர் இறங்குதறை பகுதியில் விழுந்து வெடித்ததில் 5 முஸ்லீம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன். இரு கடற்படையினர் காயமடைந்துள்ளனர். நேற்றும் நேற்று முன்தினமும் மேற்கொண்ட விமான தாக்குதல்களின்போது வன்னிபுலிகளின் இலக்குகள் தாக்கியழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் சேதவிபரங்கள் எதுவும் வெளிவரவில்லை.
தாக்குதலிற்கு உள்ளான பகுதிகள் வன்னிபுலிகளின் கட்டுப்பாட்டு பகுதியாகையால் செய்தியாளர்கள் சுதந்திரமாக செய்திகளை சேகரிக்க முடியாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Average Rating