மிளகாய் தொட்டியி்ல் நீத்து!!

Read Time:3 Minute, 34 Second

neetu200“கைவசம் மும்பை ஹீரோயின் இருக்கு… சீன் படு ஹாட்டா வரணும்… பாத்தாலே பத்திக்கணும்… என்ன செய்யலாம்?”
“பேசமா மிளகாய் தொட்டியில இறக்கிவிட்டா.. படு ஹாட்டா இருக்காது?”
“ஆ… சூப்பர் ஐடியா… அதையே சீனாக்கு”
-படிக்க சற்று பைத்தியக்காரத்தனமாக தெரிகிறதல்லவா! ஆனால் இது தமாஷ் இல்லை.. நிஜமாகவே நடந்தது, விஷால் நடிக்கும் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்துக்காக. இந்தப் படத்தில் நீத்து சந்திரா உள்ளிட்ட 3 நாயகிகள் கவர்ச்சி உலா வருகிறார்கள். படத்தில் விஷால்- நீத்து- தனுஸ்ரீ தத்தா தோன்றும் ஒரு செம ஹாட் பாடல் காட்சியை படமாக்கினாராம் இயக்குநர் திரு. நீத்து சந்திரா சம்பந்தப்பட்ட காட்சி வரும்போது, அதை படு செக்ஸியாக காட்ட வேண்டும் என்று அவருக்கு ஆசை வந்துவிட, உதவிகளுடன் என்னென்னமோ யோசித்தும் உருப்படியாக ஒன்றும் தோன்றவில்லை. கடைசியில் மிளாகாயை ஒரு தொட்டிக்குள் கொட்டி அதில் நீத்துவை உருட்டி புரட்டி எடுத்தால், காட்சி ஹாட்டாக வந்துவிடும் என்ற யோசனையை யாரோ சொல்ல அதைக் கப்பென்று பிடித்துக் கொண்ட இயக்குநர் , உடனே நீத்துவிடம் கூட சொல்லாமல் தொட்டிக்கும் மிளகாய்க்கும் ஏற்பாடு செய்தாராம். காட்சி படமாகும்போது மட்டும் நீத்துவிடம் விஷயத்தைச் சொன்னாராம். அவரோ ‘அய்யோ அம்மா…’ என்று எகிறி பின்வாங்க, பயப்பட வேண்டாம் இது டம்மி மிளகாய்தான் என்று அவருக்கு விளக்கினாராம். ஒருவழியாக ஒப்புக் கொண்ட நீத்து, தொட்டியில் இறங்க, டம்மி மிளகாய் போதாமல் போய்விட்டதாம். வேறு வழியின்றி நிஜ மிளகாயை ஒரு மூட்டை வாங்கிவந்து நீத்து மீது கொட்டியிருக்கிறார்கள். இந்த மிளகாயில் நீந்திக் கொண்டே விஷாலை காமப் பார்வை பார்த்து பாட்டுப் பாட வேண்டும்…

விஷாலை காமப் பார்வை பார்க்க நீத்து முயன்றபோது, மிளகாய் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டதாம் நீத்து மேனியில். எரிச்சல், காந்தல் என எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அந்த காட்சியை முடித்துவிட்டு பாடி முடித்து, விட்டால் போதும் என ஓடினாராம் நீத்து, பாத்ரூமுக்கு.

அப்போது உள்ளே நுழைந்தவர் அன்றைக்கு பேக்கப் சொல்லி முடிக்கும் வரை பாத்ரூமிலிருந்து வெளியே வரவே இல்லையாம்…!

ஃபையர் மாதிரி இந்த சீன் வரணும் என்று கூறி நெருப்பில் இறக்கினாலும் இறக்கிவிடுவார்களோ!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “மிளகாய் தொட்டியி்ல் நீத்து!!

Leave a Reply

Previous post ஜனாதிபதியிடம் விருது பெற்றார் பிரகாஷ் ராஜ்
Next post எட்டியாந்தோட்டைப் பிரதேசத்தில் இரு குழுக்களிடையில் மோதல், ஒருவர் உயிரிழப்பு