எட்டியாந்தோட்டைப் பிரதேசத்தில் இரு குழுக்களிடையில் மோதல், ஒருவர் உயிரிழப்பு

Read Time:1 Minute, 45 Second

கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டைப் பிரதேசத்தில் இரு குழுக்களிடையில் இடம்பெற்ற மோதலின்போது ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். யட்டியாந்தோட்டை பலசல்ல வீதியிலுள்ள வீடொன்றில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறித்த நபர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 22வயதுடைய அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரே கொலை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ள நிலையில் அவரைத் தேடும் பணியில் பொலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை காலி, மத்துகம வெலிகன்ன பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு நேற்று மாலை இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலீசார் அவரைத் தேடிவருகின்றனர். 28வயதான புஸ்லமுல்லையைச் சேர்ந்தவரே கொலையுண்டவராவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிளகாய் தொட்டியி்ல் நீத்து!!
Next post கனடாவில் கைதான 76 இலங்கையர்களில் ஒருவர் விடுதலை