முன்னாள் இராணுவத்தளபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க சட்டத்தில் இடமுள்ளதாவென ஆராயும்படி சட்டமா அதிபருக்கு உத்தரவு

Read Time:1 Minute, 49 Second

ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவலொன்று பரவிவருவதால் சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? என ஆராய்ந்து உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் மொஹான் பீரிஸிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இராணுவத்தில் பணியாற்றி வரும் பிரதான அதிகாரியொருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என ஜனாதிபதிக்கு நெருங்கிய சட்டத்தரணிகள் சிலர் சுட்டிக் காட்டியுள்ளதையடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தின் சிரேஷ்ட உறுப்பினரான ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதி வழங்கிய பணிநீடிப்பு டிசம்பர் மாதம் 18ம் திகதி முடிவடையவுள்ளது. இவ்வாறான ஓர் சூழ்நிலையில் ஜனாதிபதி கடந்த ஜூலை மாதம் 15ம் திகதி ஜெனரல் சரத்பொன்சேகாவை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக இரண்டு வருடகாலத்திற்கு நியமித்தார். எவ்வாறாயினும் எதிர்காலத்தில் பணிநீடிப்பை எதிர்பார்க்கப் போவதில்லை என்று சரத்பொன்சேகா ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரேசில் சிறையில் கலவரம்-7 கைதிகள் எரித்து கொலை
Next post ஜனாதிபதியிடம் விருது பெற்றார் பிரகாஷ் ராஜ்