பிரேசில் சிறையில் கலவரம்-7 கைதிகள் எரித்து கொலை

Read Time:1 Minute, 18 Second

பிரேசில் நாட்டின் வட கிழக்கு பகுதியில் ஜொவா பெசோவா என்ற இடத்தில் உள்ள சிறையில் 860 தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறையில் கைதிகளிடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதையடுத்து சிறைக்குள் இரு கோஷ்டிகளும் அடிதடியிலும் தீ வைப்பிலும் ஈடுபட்டன. இதில் 5 கைதிகள் அடைக்கப்பட்டிருந்த ஒரு அறையிலும் தீ வைக்கப்பட்டது. இதில் அந்த 5 கைதிகளும் உடல் கருகி பலியாயினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு சிகிச்சை பலனின்றி பலியாயினர். மேலும் தீயில் கருகிய 48 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தச் சிறையில் மோதல்கள் நடப்பது புதிதல்ல. இதுவரை 15 பேர் இங்கு நடந்த மோதல்களில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைக் கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் கணபதி கனகராஜ்
Next post முன்னாள் இராணுவத்தளபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க சட்டத்தில் இடமுள்ளதாவென ஆராயும்படி சட்டமா அதிபருக்கு உத்தரவு