மலேசியாவில் 6 இலங்கையர்கள், ஐ.நா. உயர்ஸ்தானிகரை சந்திக்க அனுமதிக்குமாறு கோரி 7நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம்

Read Time:1 Minute, 22 Second

மலேசிய அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 6 இலங்கையர்கள், அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரை சந்திக்க தமக்கு அனுமதி வழங்குமாறு கோரி 7நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்ணொருவர் உட்பட உண்ணாவிரதம் இருக்கும் ஆறுபேரும் மலேசியாவில் ஜோஹோர் மாநிலத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 108இலங்கை அகதிகளில் அடங்குகின்றனர். செல்லுபடியாகும் பிரயாணப் பத்திரங்களை வைத்திருக்காததால் இவர்களை ஹோட்டல் ஒன்றில் வைத்து கடந்த மாதம் பொலீசார் கைதுசெய்திருந்தனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் 6 இலங்கையர்களுக்கும் அகதி அஸ்தஸ்த்துக்கான பத்திரங்களை வழங்கியுள்ளது என்று அவர்கள் தெரிவித்திருந்ததாக தடுப்புக்காவல் கைதிகளுக்காகப் பேசிவரும் உள்ளூர் மனித உரிமைகள் காப்பகம் ஒன்றின் ஒருங்கிணைப்பாளர் ஈ. செல்வராஜா தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடாவில் கைதான 76 இலங்கையர்களில் ஒருவர் விடுதலை
Next post குருநாகல் ஆங்கில ஆசிரியர் கொலை தொடர்பாக ஆசிரியை கைது