ஜனாதிபதியின் ஆலோசகராக கடமையாற்ற விருப்பமில்லை -தயான் ஜயதிலக்க

Read Time:2 Minute, 0 Second

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு ஆலோசகராக கடமையாற்றும் விருப்பம் தமக்கில்லை என முன்னாள் ஜெனீவாவிற்கான இலங்கை பிரதிநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசகராக தம்மை நியமித்துள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் ஜனாதிபதியுடன் நேர்மாயான முறையில் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கு தாம் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு தாம் வியட்நாம் விஜயத்தில் இணைந்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். தாம் வியந்து பாராட்டும் வியட்நாம் தேசியத் தலைவர்கள் வாழ்ந்த பூமியை பார்ப்பதற்கு தமக்குள் ஏற்பட்ட உந்துதலே இந்த விஜயத்தில் கலந்துக்கொள்வற்கான பிரதான காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் உலக அரசியலில் அழியாத புகழை ஈட்டியுள்ள வியட்நாமின் ஹச்சீ மின்னாவின் வாழ்ந்த இடங்களை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிட்டியமை பெரும் பாக்கியமாக கருதுவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தம்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சில சக்திகள் இந்த விஜயம் குறித்து வெளியான செய்திகளில் தமது பெயரை நீக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பம்பலப்பிட்டி கடலில் அடித்து மூழ்கடிப்பட்டவர் தமிழ் இளைஞர்.. பொலீஸ் உத்தியோகத்தர் கைது
Next post ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயற்சித்தவர் யாழ்ப்பாணத்தில் கைது