கடவுச்சீட்டில் மோசடி செய்து இத்தாலி செல்ல முற்பட்ட ஆறுபேர் பிணையில் விடுதலை

Read Time:1 Minute, 28 Second

கடவுச்சீட்டில் மோசடி செய்து இத்தாலி செல்ல முற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆறுபேரை நீர்கொழும்பு நீதவான் தலா 20ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் 3லட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்துள்ளார். ஆகஸ்ட் 11ம்திகதி இலங்கையிலிருந்து இவர்கள் இந்தியாவுக்கு சென்று அங்கியிருந்து சவூதி அரேபியா ஊடாக இத்தாலி புறப்பட்டுள்ளனர். சவூதி அரேபிய குடிவரவு அதிகாரிகள் கடவுச்சீட்டுக்களை பரிசீலனை செய்தபோது மோசடியைக் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து ஆறுபேரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்திறங்கிய இவர்களை சீ.ஐ.டி யினர் கைதுசெய்தனர். நீர்கொழும்பு, மாதம்பை, திருமலை, வவுனியா, யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் நீதிமன்றில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜ் ராஜரட்ணத்தின் பிணைத் தொகையை குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது
Next post தனது காதலியுடன் அந்தரங்கமாக இருந்த காட்சிகளை வீடியோவில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டவர் விளக்கமறியலில்