புலிகளின் சர்வதேச நெட்வொர்க்: இலங்கைக்குத் தெரிவித்த கேபி! (PART-2)

Read Time:2 Minute, 11 Second

lttekp-006விடுதலைப் புலிகளின் சர்வதேச நெட்வொர்க் முழுவதையும் கேபி எனப்படும் குமரன் பத்மநாபா இலங்கை ராணுவத்திடம் சொல்லிவிட்டதாக இலங்கைப் பத்திரிகை திவயின தெரிவித்துள்ளது. புலிகளின் புதிய தலைவராக தன்னை அறிவித்துக் கொண்ட கேபியை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறது இலங்கைபோலீஸ். இதில் உளவுத்துறையினருக்கு தேவையான தகவல்கள் கிடைத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் 57 பேர் உலகின் பல்வேறு நாடுகளில் இருப்பதை சிங்கள அதிகாரிகளிடம் பத்மநாதன் கூறி உள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் திவயின என்ற பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சர்வதேசப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அரவிகன் தற்போதும் முழு செயல்பாட்டில் இருப்பதாக பத்மநாதன் கூறி உள்ளதாக தெரிகிறது. இது தவிர எந்தெந்த நாடுகளில் புலித் தலைவர்கள் யார்-யார் உள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் இவர்களது பெயர்கள் இதுவரை எதிலும் வெளியானது இல்லை. தற்போது தான் இந்த பட்டியலை முதன் முதலாக சிங்கள அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் புலிகளின் மொத்த நெட்வொர்க்கையுமே கேபி, சொல்லி விட்டதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட தலைவர்கள் தங்கள் நடவடிக்கைகளை இப்போதைக்கு அமைதியாக்கிக் கொண்டதாகவும் தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “புலிகளின் சர்வதேச நெட்வொர்க்: இலங்கைக்குத் தெரிவித்த கேபி! (PART-2)

  1. ஐயோ பாவம். பெரிய கண்டு பிடிப்பு…

    ஹிஹி… இவர்கள் வெளியிட்ட பெயர்கள், ஏற்கனவே புலம் பெயர் நாடுகளில் , நாடு கடந்த தமிழ் ஈழ செயற்குழு எண்டு வெளியாகி விட்டது.

Leave a Reply

Previous post திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே-ஏழுமலையானை தரிசித்தார்
Next post பம்பலப்பிட்டி சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் -ஆயர் சிக்கேரா வேண்டுகோள்.