பம்பலப்பிட்டி சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் -ஆயர் சிக்கேரா வேண்டுகோள்.

Read Time:1 Minute, 35 Second

கொழும்பு பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடித்து தமிழ் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு கொழும்பு மாவட்ட அங்கிலிக்கன் ஆயர் வணக்கத்துக்குரிய டுலிப் சிக்கேரா கோரிக்கை விடுத்துள்ளார். மனநோயாளியான ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் வேறு சிலரும் தாக்கியமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துமாறு கேட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும் என பொலிஸ் மா அதிபரிடம் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தை காக்கின்ற பொலிஸ் உத்தியோகத்தர்களின் பொறுப்புக்கள் உணரப்பட வேண்டும் என்பதனையும் அவர் வலியுறுத்தியுள்ளார். பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறான நிலைமைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து அறிந்திருப்பது அவசியமானதாகும் இந்நிலையிலேயே இவ்வாறான குற்றங்களை தடுக்க முடியும் என்றும் ஆயர் சிக்கேரா தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளின் சர்வதேச நெட்வொர்க்: இலங்கைக்குத் தெரிவித்த கேபி! (PART-2)
Next post புத்திசுயாதீனமற்ற அப்பாவி தமிழ் இளைஞரின் உயிரை கடல் அன்னை காவு கொண்டது! நடந்த சம்பவமென்ன??..