புத்திசுயாதீனமற்ற அப்பாவி தமிழ் இளைஞரின் உயிரை கடல் அன்னை காவு கொண்டது! நடந்த சம்பவமென்ன??..

Read Time:3 Minute, 29 Second

aniaiyoகாக்கிச்சட்டை அணிந்த காடையர்களின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையினால் புத்திசுயாதீனமற்ற அப்பாவி தமிழ் இளைஞரின் உயிரை கடல் அன்னை காவு கொண்டது! நடந்த சம்பவமென்ன??..
பம்பலப்பிட்டி கடலோரத்தில் நேற்றுமுன்தினம் வீதியோரம் நின்றுக் கொண்டிருந்த தமிழ்இளைஞன் ஒருவன் அவ்விழியில் சென்ற ரயில்வண்டி மீதும் பஸ்வண்டிகள் மீதும் கல்லெறிந்துக் கொண்டிருந்தான். அப்பிரதேச மக்கள் பொலிஸ_க்கு தகவல் வழங்கியதையடுத்தே அங்குவந்த பொலிஸார் அந்த இளைஞனை தடிகள் மற்றும் இரும்பு பொல்லுகளைக் கொண்டு விரட்டினர். பின்னர் உயிருக்கு அஞ்சி அந்த இளைஞன் கடலுக்குள் ஓடினான். பின்தொடர்ந்த பொலிஸார் கடலுக்குள் சென்று அவ்விளைஞனை சாரமாரியாக தாக்கினர். அந்த மனநோயாளி இளைஞர் தன்னைத் தாக்க வேண்டாம் என்று கைகூப்பி கெஞ்சிக்கேட்டும் சுற்றிநின்ற சிலபொலிஸ் காடையர்களும் மற்றும் வேறு சில காடையர்களும் அந்த இளைஞன் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தினர். வேதனை தாங்க முடியாத அந்ததமிழ் இளைஞன் கடல்அன்னையை கும்பிட்ட வண்ணம் கடலுக்குள் சென்று கடலோடு அவன் உயிர் சங்கமமானது. இச்சம்பவத்தை ஒரு தனியார் ஊடக ஊடகவியலாளர் ஒருவர் வீடியோப் பிடித்து அதனை தனியார் தொலைக்காட்சியிலும் அரச தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக்கினார். இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் ஊடகப்பேச்சாளருமான நிமல் மெதிவக்க அதுதொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் யார் செய்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் ஆடுமாடுகளைப் போல் அல்லாமல் மனிதர்கள் மனிதர்களாக போற்றப்பட வேண்டும் மற்றும் ஜாதி மதம் பாராமல் அனைவரும் ஒரே மக்கள் ஒரே உயிர் என்று மதிக்கப்பட வேண்டும் மேலும் இவ்வாறான ஈனச்செயலில் ஈடுபடும் ஒரு சில பொலிஸ் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மக்களுக்கு தொண்டு செய்யும் முழு பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்புமே கெட்டபெயரை சம்பாதிக்க வேண்டி ஏற்படுகிறது. மேலும் குற்றம் செய்தவருக்கு கொடுக்கப்படும் தண்டனை எல்லோருக்கும் ஒருபாடமாக அமைய வேண்டும் எனவும் பாதுகாப்பு தரப்பை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Thanks… www.athirady.com

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

11 thoughts on “புத்திசுயாதீனமற்ற அப்பாவி தமிழ் இளைஞரின் உயிரை கடல் அன்னை காவு கொண்டது! நடந்த சம்பவமென்ன??..

  1. அதிரடியின் ஆக்கம் பாராட்டுக்குரியது….

    ஆடுமாடுகளைப் போல் அல்லாமல் மனிதர்கள் மனிதர்களாக போற்றப்பட வேண்டும் மற்றும் ஜாதி மதம் பாராமல் அனைவரும் ஒரே மக்கள் ஒரே உயிர் என்று மதிக்கப்பட வேண்டும்

    நன்றி

  2. the act of the police officer is not acceptable.he should not take the law in to his hand.he must be punished for the crime that he has commited.
    I thing people like him is not fit for the service.when you try to prevent a crime you should not commit another crime.

  3. கையெடுத்து வணங்கி உயிர் பிச்சை கேட்ட 26 வயது தமிழ் இளைஜர் பாலவர்னம் சிவகுமாரை அடித்து கடலில் தள்ளிய காட்சியை தொலைக்காட்சிகளில் செய்திப்படமாக பார்த்து அகில உலகும் அதிர்ச்சியடைந்துள்ளது.

    இந்த சம்பவத்தின் காரணமாக கைது இடம்பெற்று இருந்தாலும், இந்த இளைஜன் தமிழன் என்பதால் நீதி வழங்க பட மாட்டாது . இத்தகைய அராஜகப் போக்கை நாம் கண்டிக்காமல் அமைதியாக இருப்போமானால், இது தொடர்கதையாக மாறிவிடும்.

    எனவே அனைத்து தரப்பினரும் தங்களது வழமையான கடமைகளை ஒத்திவைத்துவிட்டு எதிர்வரும் புதன்கிழமை 4ஆம் திகதி பகல் 12.00 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றுக்கூடி எமது சாத்வீக எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும்.

  4. பட்டப்பகலில், பலரும் பார்க்க நடைபெற்ற இந்தப் படுகொலைச் சம்பவத்தை கடற்கரையில் நின்ற சிலர் கைத் தொலைபேசி மூலம் பதிவு செய்து வெளியிட்ட காரணத்தால், குற்றவாளிகளில் ஒருவரான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறைந்த பட்ச நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பினும், சிங்கள நீதித்துறை இந்தப் படுகொலையில் தொடர்புள்ள ஏனைய குற்றவாளிகளையும் கைது செய்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்துமா? அப்படி நிறுத்தினாலும் சிங்கள நீதித்துறை பாரபட்சமான விசாரணை நடாத்தித் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமா? என்பது சந்தேகமே.

    கடந்த காலங்களில் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீதான எந்தப் படுகொலைக்கும், எந்தப் பாலியல் வன்புணர்வுப் படுகொலைக்கும் சிங்கள நீதித்துறை நீதி வழங்கிய வரலாறே கிடையாது.

    குற்றவாளி சிங்களவனாகவும், பாதிக்கப்பட்டவன் தமிழனாகவும் இருக்கும் பட்சத்தில் சிங்கள தேசத்தின் நீதிதேவதை விடுமுறையில் சென்றுவிடும். இதுவே இலங்கைத் தீவின் நீதியியல் வரலாறாகும்.

    1983-ம் ஆண்டு கறுப்பு ஜுலை இனப் படுகொலைகளுக்குப் பின்னர் கொழும்பில் பகிரங்கமாக அரங்கேற்றப்பட்ட முதலாவது தமிழினப் படுகொலையாகும். எண்ணற்ற தமிழர்கள் காரணமற்ற வகையில் படுகொலை செய்யப்பட்டு, வீதிகளிலும், வாவிகளிலும் வீசப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் அத்தனையையும் நியாயப்படுத்த சிங்கள தேசம் விடுதலைப் புலிகள் என்ற முகவரியைக் கொடுத்து நியாயம் கற்பித்து வந்தது.

    தமிழீழ மண்ணில் முள்ளிவாய்க்கால் வரையும், அதன் பின்னரும் நிகழ்த்தி முடிக்கப்பட்ட அத்தனை படுகொலைகளும் யுத்த பின்னணியில் நீதி கோர முடியாமலேயே மூடி மறைக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் கொழும்பில் இந்தக் கொடூரம் பட்டப்பகலில், பலரும் பார்த்திருக்க நிகழ்த்தி முடிக்கப்பட்டுள்ளது.

    முள்ளிவாய்க்கால் வரை விடுதலைப் புலிகளின் பலம் சிங்கள தேசத்தை அச்சுறுத்தியதனால், அவர்களால் 1983 ற்குப் பின்னர் இத்தகைய எந்தவொரு கொடூரத்தையும் அரங்கேற்ற முடிந்திருக்கவில்லை.

    தமிழ் மக்களது பலம் சிதைக்கப்பட்டு, தற்போது தமிழர்கள் மீண்டும் அடிமைப்படுத்தப்பட்ட சூழலில் மீண்டும் இனப் படுகொலைகள் தெற்கிலும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது என்ற செய்தி இதன் மூலம் தென் பகுதியில் வாழும் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

    முன்பெல்லாம் தெற்கில் வாழும் தமிழர்கள் சிங்கள இனத்தின் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படும் போதெல்லாம், அவர்கள் தமது பாதுகாப்பிற்காக வடக்கை நோக்கியும், கிழக்கை நோக்கியும் அவர்களது தாயக பூமிக்கு சிங்கள அரசுகள் அனுப்பி வைப்பதுண்டு.

    தற்போது, தமிழர்கள் பிரதேசங்கள் முழுவதும் சிங்கள இராணுவத்தால் தமிழர்களின் பாதுகாப்பு அங்கும் கேள்விக் குறியாகவே உள்ளது. இலங்கைத் தீவு முழுவதும் போக்கிடமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் அடிமைப்படுத்தப்பட்ட தமிழர்களது எதிர்காலம் சிங்கள இனவாதிகளின் விருப்பத்தைப் பொறுத்ததாகவே இருக்கப் போகின்றது.

    இதைத் தொடர அனுமதிக்கப் போகின்றோமா? அல்லது எதிர்த்துப் போராடப் போகின்றோமா? என்ற எமது தீர்மானத்திலேயே தமிழ் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

  5. ராஜீவ் காந்தியை தாக்கிய ராணுவச் சிப்பாய்கே தண்டனை வழங்காமல் அவனை தேசிய வீரனாக அறிவித்தவர்களா கடலில் தமிழ் இளைஞனை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப் போகிறார்கள்???

  6. கைது செய்வது எல்லாம் ஒரு கண் துடைப்பு தான்..
    இந்த செய்தியை வாசிக்கும் பொது ஒரு நெருடல் என்னுள்ளே…

    இந்த அப்பாவிக்கு தமையன் தந்தை என்று குடும்பம் உள்ளது…
    ரத்மலானையில் வசிக்கும் ஒரு புத்தி சுவாதீனமற்ற பையன் பம்பலபிட்டியவில், அலைந்து திரியும் வரை அவர் குடும்பம் எவ்வளவு பொறுப்பற்று இருந்து இருக்கிறார்கள்.. அல்லது எங்கேயாவது போய் தொலையட்டும் என்று விட்டு விட்டார்களா?
    எவ்வளவு கவலையீனம்…. கொலை செய்த காட்டு மிராண்டிகளை விட எனக்கு இந்த பையனின் குடும்பம் மீது தான் மிகவும் ஆத்திரமாக உள்ளது.

    புத்தி சுவாதீனமில்லாத தம் பிள்ளையை ஒரு குழந்தை போல பார்க்க கூடாதா?
    எல்லா உலகம் ஐயா இது.

    மேலும் வேதனை என்னவென்றால், தமிழ்வின் இதை 1983 கலவரத்துடன் ஒப்பிட்டு எழுதி இருப்பது தான்…..மீண்டும் இனப் படுகொலைகள் தெற்கிலும் தலைதூக்க ஆரம்பித்து விட்டதாம்….

    ஒரு அப்பாவியின் மரணத்தில் குளிர் காயவும் அதை தமக்கு சாதகமாக பயன் படுத்தும் இந்த நாய்களை என்ன செய்வது?

  7. சிலரின் வேதனை புரிகிறது….

    ராஜிவ் காந்தியை தாக்கியவர்களுக்கு தண்டனை தரப்பட வில்லை என்று…
    ஆனால் அது தானே ராஜிவ் காந்தியை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டதே….

    தாக்கியவருக்கா கொலை செய்தவருக்கா தண்டனை முக்கியம் கொடுக்க வேண்டும்?

  8. இங்கே சிலர் தமிழ்வின் செய்திகளை கொப்பி பேஸ்ட் பண்ணி வருகிறார்கள்…

    கருத்துக்களை எழுதுங்கள், வேறு இணைய தள செய்திகளை போட்டு , இந்த கருத்து பகுதியை நிரப்ப வேண்டாம்…

    அந்த செய்திகளின் URL ஐ மட்டும் தந்தால் , நாங்களும் வாசிக்கலாம்..

  9. அதுசரி தமிழன் கொலைசெய்தால் தண்டனையை உடனே அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கும் உத்தமர்கள் Action Faim பணியாளர்களின் கொலைக்கு தண்டனை வழங்காமலே கதையை முடித்துவிட்டார்களே நீங்கள் தெய்வமாக வணங்கும் சிங்கள ராஜாக்கள்..

  10. 1977ம் ஆண்டு இடம்பெற்ற வன்செயலின்போது யாழ்ப்பாணத்தில் எந்தவொரு சிங்களவரும் தமிழ் மக்களால் தாக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் சொத்துக்கள் அழிக்கப்படவில்லை. சூறையாடப்படவில்லை. என்பதை நான் எனது கண்களால் கண்டு தெரிந்து கொண்டவன். பாதுகாப்பு பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்கள் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பல அதிகாரிகள் என்னை வற்புறுத்தியும் நான் யாழ். மண்ணையும் அம்மக்களையும் விட்டு தென்பகுதிக்கு வெளியேறவில்லை. இவ்வாறு வரலாற்று ஆய்வாளரும், பேராசிரியருமான சுசரித்த கம்லத் தெரிவித்துள்ளார்.

    நன்றி அதிரடி .

    சில சிங்கள நண்பர்களுக்குப் புரிந்தது கூட இந்த ஒட்டுண்ணிகளுக்குப் புரியவில்லை!!

  11. அப்படி இப்பவாவது ராஜிவ் காந்தியை கொலை செய்தது நீங்கள் தான் ஒத்துக்கொன்டீர்களே…
    துன்பியல் சம்பவம் என்று மழுப்பாமல் ஒத்துக்கொண்டதுக்கு நன்றி…

    தவறை உணருவது ஒருவன் திருந்தி விடுவதன் அறிகுறி….

    சிங்களவன் செய்வது எல்லாம் சரி என்று நாங்கள் ஒரு நாளும்
    வாதிட்டதில்லை..

    நீங்கள் தான் புலி சொன்னால் சரி..செய்தால் சரி என்று மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல வாழ்ந்தீர்கள்.

    எமது வாதமெல்லாம் சிங்களவனுக்கு நிகராக , சற்று மேலாகவே நீங்களும் அநியாயம் செய்து விட்டு சிங்களவனை மட்டும் இனத் துவேசி என்று சொல்லவது சரியல்ல….

Leave a Reply

Previous post பம்பலப்பிட்டி சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் -ஆயர் சிக்கேரா வேண்டுகோள்.
Next post அன்று பிரபாகரன் புகழ்பாடிய “கருணா” இன்று மஹிந்த புகழ் பாடுகின்றார் (Part-3)