அமெரிக்காவிடமிருந்து ‘தப்ப’ ராஜபக்சே தீவிரம்!..
ஈழப் போர் குறித்து என்ன மாதிரியான விளக்கம் தேவைப்பட்டாலும் அதுகுறித்து நேரடியாக என்னிடமே அமெரிக்கா கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என அதிபர் ராஜபக்சே அமெரிக்காவுக்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொன்சேகாவை விரைவில் அமெரிக்காவிலிருந்து கொழும்புக்கு வரவழைக்கவும் முயற்சிகளை இலங்கை அரசு முடுக்கி விட்டுள்ளதாம். ஒரு நாள் கூட அமெரிக்காவின் விசாரணைக்கு பொன்சேகா உட்பட்டு விடக் கூடாது என்றும் இலங்கை அரசு தீவிரமாக உள்ளதாம். இதுதொடர்பாக மூத்த அமைச்சர்களை அழைத்து அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார் ராஜபக்சே. மேலும், போர்க் குற்றம் தொடர்பாக யாருக்கேனும், குறிப்பாக அமெரிக்காவுக்கு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் தன்னையே நேரடியாக கேட்கலாம் என்று அப்போது கூறினாராம் ராஜபக்சே. முப்படைகளின் தலைவர் என்ற முறையில் நானே அனைத்து விவரங்களையும் சொல்ல முடியும் என்றும் ராஜபக்சே தெரிவித்தாராம். இதுதொடர்பாக அமெரிக்க அரசுக்கும் உரிய முறையில் தகவல் தெரிவித்துள்ளதாம் இலங்கை அரசு. மேலும், உடனடியாக பொன்சேகாவை அமெரிக்காவிலிருந்து வரவழைப்பது தொடர்பாகவும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு சிறுவர்களைத் தமது படைக்குச் சேர்த்ததாகவும், இலங்கைப் படைகள், போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்ததாகவும், தம்மிடம் சரண் அடைந்த போராளிகளைக் கொன்றதாகவும்,
படையினர் அல்லது அரசு சார்பு ராணுவக் குழுக்கள் தமிழ்ப் பொது மக்களை குறிப்பாக சிறுவர்களையும் இளைஞர்களையும் கடத்திச் சென்று கொன்றதாவும் அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளைக் கொடியுடன் யார் சரணடைய வந்தாலும் ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொன்று விடும்படி கோத்தபயா உத்தரவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்க அரசு கூறியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இலங்கை அரசு தானே ஒரு விசாரணையை நடத்துவதாக அவசரம் அவசரமாக அறிவித்தது. இந்த நிலையில் அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்கியிருப்பது போல தெரிவதால் இலங்கை அரசு பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
3 thoughts on “அமெரிக்காவிடமிருந்து ‘தப்ப’ ராஜபக்சே தீவிரம்!..”
Leave a Reply
You must be logged in to post a comment.
கொடுமை செய்தவனை திருப்பதியான் காப்பாற்றினால் அவன் கடவுளே அல்ல…இதைப்புரிந்துகொள் ராஜபக்சே!!!!
அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுகிறதாம்!!!!!. பொன்சேகாவும் உலகின் மோசமான பயங்கரவாதிகளை ஒழித்த சூரப்புலியாம்!!!!!!!!. இப்போ அமெரிக்கா பொன்சேகாவை விசாரிக்க வேணுமாம்?. யார் பயங்கரவாதிகள்?? யார் பயங்கரவாதிகளோடு கூட்டு????? யார் பயங்கரவாதிகளுக்கு எதிரானவர்கள்?????
யாருக்கு யார் எதிர்??????????????
முதலில் அமெரிக்க இராக்கில் செய்த செய்கின்ற யுத்த குற்றங்களை விசாரிக்க வேண்டும்.