இருவரும் ஒரே வீட்டில் பிரபுதேவாவுடன் வசிக்கலாம் – ரமலத்துடன் நயன் பேச்சு!!
பிரபு தேவா – நயன்தாரா இருவருமே ஒருவரையொருவர் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்கள் என்று கோடம்பாக்கவாசிகள் சொல்வது உண்மையாகும் நாள் நெருங்குகிறது. தடை பல கடந்து, திருமண மேடையேற இருவரும் தயாராகி விட்டதாக தெரிகிறது. அதை விட முக்கியமாக, இருவரது பெற்றோரும் கூட இந்த திருமணத்துக்குப் பச்சைக் கொடி காட்டி விட்டார்களாம். பிரபுதேவா மனைவி ரம்லத் மட்டும்தான் எதிர்க்கிறாராம். அவரையும் சமரசப்படுத்தும் வேலைகள் நடக்கின்றன. அடுத்த மாதம் திருமணம் நடக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ரமலத்திடம் போனில் நயன்தாரா பேசியதாகவும் இன்னொரு தரப்பு கூறுகிறது. இந்த பேச்சு வார்த்தையின்போது, என்னால் உங்களுக்கு ஒரு தொந்தரவும் இருக்காது. நீங்கள் விரும்பினால் இருவரும் ஒரே வீட்டில்கூட இருந்து கொள்ளலாம். நான் தனியாக இருந்தால் பிரபு தேவாவை என்னுடனே வைத்துக் கொள்வது போலத் தோன்றும் என்று நயன் சொன்னதாகவும் அதற்கு ரம்லத் தரப்பில் எந்த பதிலும் இல்லையென்றும் கூறுகிறார்கள். இந்த பேச்சுக்குப் பிறகுதான், எனக்கு ஆண்டவன் துணையிருப்பார் என்றும் யாரும் எதிரியில்லை என்றும் நயன்தாரா பேசி வருகிறார். முன்பெல்லாம் பிரபுதேவா பற்றி கேள்வி கேட்டாலே தவிர்க்கும் நயன், இப்போது பிரபுதேவா புராணம் பாடுகிறார். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஜூனியர் என்டிஆர் ஒரு பிரஸ்மீட்டில், எனக்கு எல்லாமே பிரபு தேவாதான் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் நயனதாராவும் பிரபுதேவாவும் பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்பது தொடர்கிறது. முன்பு விருது விழாவில் மட்டும் பங்கேற்றவர்கள் இப்போது ஆடியோ விழா, சினிமா சிறப்புக் காட்சிகள் என கட்டுடைத்த வெள்ளமாய் சுற்றத் தொடங்கியுள்ளார்கள். கோவில் கோவிலாகப் போய் சிறப்பு வழிபாடும் நடத்துகிறார்களாம்.
One thought on “இருவரும் ஒரே வீட்டில் பிரபுதேவாவுடன் வசிக்கலாம் – ரமலத்துடன் நயன் பேச்சு!!”
Leave a Reply
You must be logged in to post a comment.
ஐயா பிரபுதேவா…உங்களுக்கு சனி மாற்றம் சரியில்லை போல தான் தெரிகிறது….