பல்கேரியாவில் 11 வயதில் தாயான சிறுமி
தனது முதல் திருமண நாளன்று அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் பல்கேரியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமி கோர்டெசா. பல்கேரியாவின் ஸ்லிவன் நகரில் உள்ள ரோமா ஜிப்ஜி பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார் கோர்டஸா. கடந்த ஆண்டு இவர் பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சிலர் இவரைக் கடத்திச் செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த ஜெலியாஸ்கோ டிமிட்ரோவ் (இப்போது வயது 19) கோர்டஸாவைக் காப்பாற்றி மீட்டார். இதையடுத்து இருவருக்கும் காதல் மலர்ந்தது. கல்யாணமும் செய்து கொண்டனர். இப்போது அழகான குழந்தைக்குத் தாயாகியுள்ளார் கோர்டஸா. அக்குழந்தைக்கு வயலட்டா என்று பெயரிட்டுள்ளனர் டிமிட்ரோவ் – கோர்டஸா தம்பதி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கோர்டஸா தனது கல்யாண தினத்தன்று பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவருக்கு 2.49 கிலோ எடையுடன் கூடிய குழந்தை பிறந்தது. அன்று இரவு மருத்துவமனையில் கழித்த கோர்டஸா காலையில் தனது திருமண உடை அணிந்து கணவருடன் இணைந்து தனது முதல் திருமண நாளை கொண்டாடினார். ஸ்லிவன் நகரில் சிறு வயதில் குழந்தை பெற்றுக் கொள்வது பெரிய விஷயமில்லையாம். 13 வயதில் தாயான பல சிறுமிகள் அங்கு உள்ளனர். ஆனால் 11 வயதில் குழந்தை பெற்ற முதல் சிறுமி கோர்டஸாதானாம். தாயானது குறித்து கோர்டஸா கூறுகையில், நான் அம்மாவானதும், எனக்குக் குழந்தை பிறந்திருப்பதும் வினோதமாக உள்ளது. பொம்மைகளுடன் விளையாடும் எனக்கு இப்போது இந்தப் புதிய பொம்மை கிடைத்துள்ளது. இவள் அழகாக இருக்கிறாள், இவளை நான் நேசிக்கிறேன். வயலட்டா சிறு குழந்தை, அவளை நன்றாக வளர்க்க வேண்டும். நான் அம்மாவாகி விட்டதால் இனிமேல் பள்ளிக்குப் போக மாட்டேன் என்றார். அம்மா ஆன சந்தோஷத்தில் கோர்டஸா இருந்தாலும் அவரது கணவரான டிமிட்ரோவுக்கு ஒரு பிரச்சினை காத்திருக்கிறது. மைனர் பெண்ணுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதால் டிமிட்ரோவ் மீது வழக்கு தொடரப்படும். அந்த நாட்டுச் சட்டப்படி மைனர் வயதில் செக்ஸ் வைத்துக் கொண்டால் 6 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்குமாம். முதன் முதலில் நாங்கள் டேட்டிங் சென்றபோது கோர்டஸாவுக்கு 15 வயதாகும் என நினைத்தேன். அவளும் தனது வயது என்ன என்பதைச் சொல்லவில்லை என்கிறார் டிமிட்ரோவ். கோர்டஸா கர்ப்பம் தரித்தபோது அதுகுறித்து அவருக்குத் தெரியவில்லை. அவரது பாட்டிதான் கோர்டஸாவின் வித்தியாசமான தோற்றத்தைப் பார்த்துக் கண்டுபிடித்துக் கூறினாராம். நிறைய பர்கர் சாப்பிட்டதால் எனது உடல் பருமன் கூடியதாகத்தான் நான் நினைத்திருந்தேன். ஆனால் எனது பாட்டி தான் நீ கர்ப்பமாகியுள்ளாய் என்று தெரிவித்தார் என்கிறார் சிரித்தபடி. பர்கர் சாப்பிட்டதால் பருமனா.. கலி முத்திடுத்து..!!
Average Rating