4 தொலைக்காட்சிக்கு மீண்டும்; முழுமையான விபரங்களை முன்வைக்க தயார் – கெஹெலிய ரம்புக்வெல்ல..
பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சிக்கு மீண்டும்; முழுமையான விபரங்களை முன்வைக்க எண்ணியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். செனல் 4 தொலைக்காட்சி கடந்த 18ம் திகதி வெளியிட்ட விசேட செய்தியொன்றில் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். செனல் 4 தொலைக்காட்சி 2009ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், இலங்கை இராணுவத்தினரால் சாதாரண பொதுமக்கள் கொல்லப்படுவது போன்ற போலிய காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டது. இந்த வீடியோ போலியானது என்பதை அரசாங்கம் விஞ்ஞானபூர்வமாக அரசாங்கம் இந்தச் சந்தர்ப்பத்தில் நிருபத்திருந்தது. மீண்டும் அந்த வீடியோ காட்சிகளை மேற்கொள்காட்டி தற்போது பொய்யான பிரசாரத்தை செனல் 4 தொலைக்காட்சி மேற்கொண்டுவருவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றஞ்சுமத்தியுள்ளார்.
One thought on “4 தொலைக்காட்சிக்கு மீண்டும்; முழுமையான விபரங்களை முன்வைக்க தயார் – கெஹெலிய ரம்புக்வெல்ல..”
Leave a Reply
You must be logged in to post a comment.
தமிழனின் கண் சிவந்தால் எதிரியின் மண் சிவக்கும் மறந்து விட வீண்டாம். காலம் வரும் எங்கள் கனவுகள் பலிக்கும் கடவுள் இருக்கிறான்..
பாசிச வாதிகளை அழித்துவிட்டு தமிழர்களை ராஜபக்ச காப்பாற்றி விட்டார் என வாழ்த்து பாடும் நாய்கள் மௌனித்து விட்டன நாம் எதிர்காலத்தை தொலைத்து விட்டு வாழும் வாழ்க்கையை யாழ்ப்பாணம் வந்து பாருங்கள் அப்போது புரியும்…இந்த கொடுமைக்கு துணை போன துரோகிகளும் நன்றாக இருங்கள்……….
எங்கே கண்டு பிடித்து விடுவார்களோ என்று கன்னி வெடி காரணம் காட்டி போக விட மறுத்தார்கள் . இப்போது இலங்கை ராணுவ அட்டுழியம் வெளி வந்துவிட்டது. படு பாவி ராஜா பக்ஷே . இவர்கள் இப்ப இருக்கும் தமிழர்களையும் கொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ? இவர்கள் இந்த படுபாதக செயல் மூலம் எல் டி டி இ செய்ததை முற்றிலும் நியாய படுத்துகிறார்கள் . பாவம் அப்பாவி தமிழர்கள். தங்கள் மண்ணிலே படும் துயரத்தை அனுபவித்தார்கள் , அனுபவிகிறர்கள், அனுபவிக்க போகிறார்கள் . தனி ஈழம் மட்டுமே அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும்…