டில்லியில் ஒபாமாவுக்கு இன்று மகத்தான வரவேற்பு..!

Read Time:2 Minute, 45 Second

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா 3ஆம் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை ஜனாதிபதி பிரதீபா பாட்டிலை சந்தித்தார். ராஷ்ட்டிரபதி பவன் வந்த இவருக்கு இங்கு முப்படை வீரர்கள் அணிவகுக்க பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. குதிரைப்படை வீரர்கள் அணிவகுத்து ஒபாமாவை முன்னும் , பின்னும் செல்ல காரில் வரவற்று வந்தனர். இங்கு பிரதமர், ஜனாதிபதி மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து பிரதமர் மற்றும் அவரது மனைவி, ஒபாமா மனைவி மிச்செல் ஆகியோர் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் இரு நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பாதுகாப்பு படைவீரர்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி மரியாதை செலுத்தினர். பேண்ட் வாத்தியம் முழங்கிட அணிவகுத்து நின்ற பல்வேறு படை வீரர்களை ஒபாமா பார்வையிட்டார். மத்தியஅமைச்சர் பிரணாப்முகர்ஜி, சரத்பவார், ஏ.கே., அன்டனி, மற்றும் உயர் அதிகாரிகள் ஒபாமாவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இந்தியா சக்திமிக்க நாடு : அணிவகுப்ப மரியாதை முடிந்தவுடன் பேட்டி அளித்த ஒபாமா கூறுகையில், “இந்தியா அளித்துள்ள இந்த சிறப்பான வரவேற்புக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா, ஆசியா மற்றும் உலக அளவில் ஒரு சக்தி மிக்க நாடாகத் திகழ்கிறது. அமெரிக்கா, வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட விரும்புகிறேன். இரு நாட்டு மக்களையும் இணைத்து செயல்பட விரும்புகிறேன். இன்று பிரதமர், ஜனாதிபதி, அமைச்சர்கள், ஆகியோரைச் சந்தித்து முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பேன். 21ஆம் நூற்றாண்டில் இந்தியா-அமெரிக்கா முக்கிய பங்காளிகளாக இருக்கும். எம் இரு நாடுகளிடையே நல்லுறவு மேம்படும் என நான் நம்புகிறேன்” எனக் கூறினார். ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் ஒபாமா அஞ்சலி செலுத்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முட்டை ஆபத்தானது-கனேடிய ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு..!
Next post ‘ஹுடுகா ஹுடுகி’க்காக இலியானா ஆட்டம்..!