‘ஹுடுகா ஹுடுகி’க்காக இலியானா ஆட்டம்..!

Read Time:2 Minute, 26 Second

தமிழில் நாயகியாக நடிக்க ரொம்பவே பிகு செய்யும் தெலுங்கு கவர்ச்சிக் கன்னி இலியானா, கன்னடத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளாராம். சமீர் தத்தானி நாயகனாக நடிக்க சதா, லேகா வாஷிங்டன் என இரு நாயகிகளுடன் உருவாகும் படம் ஹுடுகா ஹுடுகி.  கோவா, மகாராஷ்டிரா மாநில எல்லைப் பகுதியில் வைத்து இப்படத்தின் பெரும்பகுதியை படம் பிடித்துள்ளனர். வேடிக்கை, காதல், சென்டிமென்ட் என வழக்கமான கலவையுடன் உருவாகும் ரொமான்டிக் படம் இது. தமிழில் சுத்தமாக வாய்ப்பிழந்து போன சதாதான் இதில் நாயகி. 2வது நாயகியாக வருகிறார் லேகா வாஷிங்டன். இவரும் தமிழில் அறிமுகமாகி தேறாமல் போனவர். இப்போது ஹுடுகா ஹுடுகி மூலம் கன்னடத்தில் ஸ்டாராகும் முயற்சியில் குதித்துள்ளார். இதில் ஒரு பாடலுக்கு இலியானா டான்ஸ் ஆடியுள்ளார் என்பதுதான் படத்தின் ஹைலைட். தெலுங்கின் முன்னணி நாயகியாக திகழும் இலியானா, தமிழ்ப் படத்தில்தான் அறிமுகமானவர். ஆனால் இப்போது அவரை தமிழில் நாயகியாக நடிக்க வைக்க பலரும் முயன்றும் கூட பிடி கொடுக்காமல் நழுவி வருபவர் இலியானா.  ஆனால் ஹுடுகா ஹுடுகி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளாராம் இலியானா. இதற்காக அவர் வாங்கிய சம்பளம் ரூ. 30 லட்சம் என்கிறார்கள்.  ஆனால் படத்தின் நாயகிகளான சதாவுக்கும், லேகாவுக்கும் கூட இந்த அளவுக்கு சம்பளம் தரவில்லையாம். கூப்பிட்டதும் ஆடஒப்புக் கொண்ட காரணத்தால் படத்தின் நாயகிகளை விட கூடுதலான சம்பளத்தைக் கொடுத்து ஆட வைத்துள்ளார்களாம்.  தமிழிலும் யாராவது இலியானாவை டான்ஸ் ஆடவைக்க டிரை பண்ணலாமே!

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டில்லியில் ஒபாமாவுக்கு இன்று மகத்தான வரவேற்பு..!
Next post அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட விருப்பம்‐ஜீ.எல்.பீரிஸ்..!