இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (01.03.2013)

Read Time:4 Minute, 35 Second

Raasipalan-003
மேஷம்:
இன்று, உங்களின் முக்கிய செயலை, மதிநுட்பத்துடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க, அனுகூல காரணி பலம் பெறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். விருந்து, விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம்:
இன்று, உங்களின் நல்ல செயல் ஒன்றை, பொறாமை குணம் உள்ளவர் பரிகாசம் செய்வர். மனதில் கஷ்டம் இருந்தாலும், முக்கிய பணிகளை நிறைவேற்றுவது அவசியமாகும். தொழிலில் அளவான மூலதனம் போதும். பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். நண்பரின் உதவியால், நன்மை கிடைக்கும்.

மிதுனம்:
இன்று, உங்களிடம் சிலர் மாறுபட்ட எண்ணங்களுடன் பேசுவர். அவர்களிடம் விலகுவதால், அன்றாட பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபார நடைமுறை சீர்பெற, புதிய அணுகுமுறை உதவும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். உணவுப்பொருள் தரம் அறிந்து உண்பது நல்லது.

கடகம்:
இன்று, உங்களின் அனுபவ அறிவு பரிமளித்து, செயல்கள் வெற்றியாகும். உறவினர், நண்பர் பாராட்டுவர். தொழில்,வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய தொடர்பு கிடைக்கும். பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். உத்தியோகஸ்தர் சிறப்பாக பணிபுரிந்து வெகுமதி, சலுகைப்பயன் பெறுவர்.

சிம்மம்:
இன்று, உங்கள் மனதில் குழப்பமான சிந்தனை ஏற்படலாம். அக்கம், பக்கத்தவரிடம் அதிக நேரம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் இலக்கு நிறைவேற, கால அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். நிர்ப்பந்தத்தின் பேரில், அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம்.

கன்னி:
இன்று, உங்களின் மனம், செயலில் புத்துணர்வு ஏற்படும். கடந்த நாட்களில் தாமதமான பணியை நிறைவேற்றுவீர்கள். தொழில்,வியாபாரம் வளர்ச்சியில் முன்னேற்றம் உருவாகும். உபரி பணவருமானம் கிடைக்கும். முக்கியமான வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

துலாம்:
இன்று, உங்களிடம் முன்னர் உதவி பெற்ற ஒருவர், கர்வமுடன் பேசுகிற சூழ்நிலையை எதிர்கொள்வீர்கள். நிதானம் காப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாத்து கொள்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். இல்லறத்துணையின் ஆறுதல் வார்த்தை, நம்பிக்கை தரும்.

விருச்சிகம்:
இன்று, உங்கள் மனதில் சவால்களை ஏற்று, செயல்பட எண்ணம் வளரும். தொழில், வியாபாரம் சார்ந்த, இடையூறுகளை சரிசெய்வீர்கள். கூடுதல் பணவரவு கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

தனுசு:
இன்று, உங்கள் செயல்களில் நேர்த்தியும், அடுத்தவர் நலன்பற்றிய அக்கறையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகள், பொறுப்பான பதவி பெற அனுகூலம் உண்டு.

மகரம்:
இன்று, எதிர்பாராத அளவில் அவசரப்பணி ஏற்படலாம். நம்பகத்தன்மை குறைந்தவர்களிடம், குடும்ப சூழ்நிலை பற்றி பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை மந்தகதியில் இயங்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும்.போக்குவரத்தில் கவனநடை நல்லது.

கும்பம்:
இன்று, உங்களுக்கு இடையூறு செய்பவரை <உணர்ந்து விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை ஏற்படும். முக்கிய தேவைகளுக்கு சேமிப்பு பணத்தை பயன்படுத்துவீர்கள். விலை மதிப்புள்ள பொருட்களை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். வெளியூர் பயணத்திட்டத்தில், மாறுதல் செய்வீர்கள். மீனம்: இன்று, உங்கள் செயலில் உண்மை, நேர்மை திறன் அதிகரிக்கும். அன்புக்குரியவர்கள் மனம் உவந்து பாராட்டுவர். தொழில், வியாபாரம் அபரிமிதமான அளவில் முன்னேற்றம் பெரும். தாராள பணவரவு கிடைக்கும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். - See more at: http://www.retham.com/morearticalr.php?cat=news&id=30353#sthash.ykv1yzfF.dpuf

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மும்பையில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த இளம்பெண்ணை கற்பழித்த ஸ்பாட் பாய்!
Next post ‘மோதலின் சூன்ய வலயம்’; திரையிடுவதை தடுக்க பேரவை மறுப்பு