இன்றைய ராசிபலன்கள்:18.03.2013

Read Time:8 Minute, 27 Second

Raasipalan-002
மேஷம்
தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். கடனை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை வாசூலிப்பீர்கள். அம்மாவின் உடல் நிலை சீராக அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்டநிறங்கள் : ப்ரவுன், மஞ்சள்

ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்டநிறங்கள் : ரோஸ், ப்ரவுன்

மிதுனம்
எதிர்காலம் பற்றிய பயம், கவலைகள் வந்துச் செல்லும். உடன்பிறந்தவர்கள் அதிருப்தி அடைவார்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். எதிர்பாராத பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்டநிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

கடகம்
மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கணவன் – மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். பணப்பற்றாக்குறை நீங்கும். அரசுக் கரியங்களில்ம் அனுகூலமான நிலை காணப்படும். பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பரபரப்பான சூழல் ஏற்படும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்டநிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

சிம்மம்
சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர் கள். மனதிற்குப்பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டு. முன்கோபத்தைத் தவிர்ப்பீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வாகனத்திலிருந்து வந்த பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்டநிறங்கள் : மஞ்சள், பிங்க்

கன்னி
இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியுண்டு. அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்டநிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

துலாம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆலோசனையின்றி முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்டநிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

விருச்சிகம்
இரண்டு மூன்று நாட்களாக தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம் – பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்டநிறங்கள் : மெரூண், ப்ரவுன்

தனுசு
வீண்செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பவருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். முன் கோபம் குறையும். தந்தையின் உடல் நிலை சீராகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்டநிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

மகரம்
இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்டநிறங்கள் : கிரே, மஞ்சள்

கும்பம்
எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. வெளிவட்டாத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்டநிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

மீனம்
திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வேற்று மதத்தினரால் நன்மைக் கிட்டும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும். தாயாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்டநிறங்கள் : மஞ்சள், கருநீலம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க தீர்மானம் நிறைவேறினாலும் இலங்கைக்கு பெரிய பாதிப்பில்லை -அரியநேத்திரன் எம்.பி
Next post சென்னையில் பௌத்த பிக்குமீது தாக்குதல் (VIDEO)