தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுக்கும், பிரபா குழுவுக்கும் இடையில் உக்கிர மோதல்
மட்டக்களப்பு காந்தாக் காட்டுப் பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவுக்கும், பிரபா குழுவுக்கும் இடையில் உக்கிர மோதல், பிரபா குழு தரப்பில் 7பேர் பலி, பலர் படுகாயம்
இன்று (30.04.2006) 1:20 மணியளவில் மட்டக்களப்பு காந்தாக் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவின் முகாமை தாக்க வந்த பிரபா குழு உறுப்பினர்களுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கடும் மோதல் மூண்டது.
சுமார் 1 மணிநேரம் இடம்பெற்ற மோதலில் பிரபா குமுவின் தரப்பில் மரணமடைந்த 7 உறுப்பினர்களின் உடல்கள் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளினால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பிரபா குழுவின் தரப்பில் பலர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. அதே சமயம் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தரப்பில் 5 போராளிகள் வீர மரணம் அடைந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாத பிரபா குழுவினர் இறந்த உறுப்பினர்களின் உடல்களை கைவிட்டு விட்டு காயமடைந்தவர்களைத் துக்கிக்கொண்டு பின்வாங்கிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
கொல்லப்பட்ட பிரபா குழு உறுப்பினர்களின் உடல்களை சர்வதேச சென்சிலுவைச் சங்கத்தினுடாக பிரபா குழுவினரிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் தெரிவித்தார்.
Average Rating